ஊற்றழிய உதைத் தெரிந்து நெரித்துச் சூடி
யுரித்தெரித்தா
னவனெம்மை யுடைய கோவே.
இது முறை நிரனிறை.
காமவிதி கண்முக மென்மருங்குல் செய்யவாய்
தோமில் துகடினி சொல்லமிர்தந் - தேமலர்க்
காந்தள் குரும்பை கனக மடவாள்கை
யேந்திளங் கொங்கை யெழில்
இஃது எழுத்து நிரனிறை.
ஆசை யல்குற் பெரியாரை யருளு மிடையுஞ் சிறியாரைக்
கூசு நுதலும் புருவமுமே குடில மாகி யிருப்பாரை
வாசக் குழலு மலர்க்கண்ணு மனமுங் கரிய மடவாரைப்
பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே
இது மிகை யெண்ணிரனிறை.
சாந்துந் தண்டழை யுஞ்சுரர் மங்கையர்க்
கேந்தி நின்றன விம்மலை யாரமே
இஃது அளவெண் ணிரனிறை.
யானுந் தோழியு மாயமும் ஆடுந் துறைநண்ணித்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்
றேனும் பாலும் போல்வன சொல்லித் திரிவானேற்
கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே
இது குறையெண் ணிரனிறை. பிறவும் அன்ன.
திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்
தண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு
இது பூட்டுவிற் பொருள்கோள்.
மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்பனி வரலா னாவே
வீறா மென்றோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழி யான்வாழு மாறே.
இஃது அடிமறி மாற்றுப் பொருள்கோள்.
அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றஞ்
|