பக்கம் எண் :
 
132நேமி நாதம்

வூர்தி இயற்றுமி னென்றான்' எனவும் இவை உயர்திணை ஒருமைப் பன்மை
மயங்கினவாறு.

‘கடிய மன்றநின் றழங்குரன் முரசம்' எனவும், ‘மண்கணை முழவின் கண்போ
லாவே' எனவும், இவை அஃறிணை ஒருமைப்பன்மை மயங்கினவாறு
கண்டுகொள்க.                                              
(10)


                  
எழுத்தல் கிளவியும், புறனடையும்

71.    புல்லா எழுத்தின் கிளவிப் பொருள்படினும்
      இல்லா விலக்கணத்த தென்றொழிக - நல்லாய்
      மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியா
      தொழிந்தனவுஞ் சார்த்தி உரை


    
 எ - ன்: எழுத்தில் கிளவி பொருள்படினும் இலக்கண முடிபு அல்ல
என்பதனையும், புறன் அடைத்தலையும் உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: எழுத்தினாற் சொல்லல் ஆகாத முற்கும், வீளையும்
முதலாயின பெயர்க்குறிகள் பொருள்பட நின்ற ஆயினும், இலக்கணம்
உடைய அல்ல என ஒழிக்க. முன்பு சொல்லிப் போந்த பல வகைப்பட்ட
சொல் ஆராய்ச்சிக் கண்ணே அடக்கி ஒழிந்த சொல்லினையும் உணர்க எ-று.

      அவை: கை காட்டல், தலை ஆட்டுதல் முதலாயின ஆராயாதே
முற்கும் வீளையும் ஆராயவேண்டிய தென்னை? இவை எழுத்துப் பிறக்கும்
தான மாதலாற் கிளவி எனவும் ஆராயவேண்டிற்று; அவை எழுத்து
அன்மையிற் சொல்ல முடிந்ததன இல்லை என்றவாறு.

       இங்கு ஆராயப்படாத சொற்கள் வழக்கினினுள் வந்தன உளவேல்
அவற்றையும் இந்நூலுள் அடங்கும் வாய் அறிந்து அடக்கிச் சொல்லுக
என்றவாறு. என்னை?

        
 கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்
         கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே 


 (தொல். வேற். மய. 34)


என்றாராகலின்                                                  (11)
                     
சொல்லதிகாரம் முற்றும்
             ஆக அதிகாரம் இரண்டுக்கு வெண்பா          
97

                   
நேமிநாத மூலமும் உரையும்
                         முற்றும்.