ஆவியேற் றன்னாவி முன்னாகும் ஐஒளவா
மேவிய ஏ ஓவும் விரைந்து.
எ - ன்:
இதுவும் ஒருசார் வடமொழி முடிபு கூறுகின்றது.
இ - ள்:
நின்ற மொழியின் பொருளை மாற்றுதற்கு முதல் நிறுத்திய
நகர உயிர்மெய் அப்பொருண் மொழியின் முதல் எழுத்து உயிர்மெய் ஆகில்
அவ்வுயிர் ஒழிய உடல் போம்; அஃது உயிர் ஆயின் நகரவுயிர்மெய் பிரிந்து
உயிர் முன்னும் உடல் பின்னும் ஆம்; என்னை?
மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. (தொல். நூன்ம.18)
என்பதனாற் பிரிந்தால் உயிர் பின்னாம் என்க. மொழி முதல் நின்ற ஏகாரம்
ஐகாரமாம்; ஓகாரம் ஒளகாரமாம் எ-று.
வ - று:
1சஞ்சலம் என நிறுத்தி, இதனை இல்லாதான் யாவன் எனக்
கருதியவிடத்து நகரவுயிர்மெய்யை முன்னே வருவித்துச் ‘சார்ந்த துடலாயிற்
றன்னுடல்போம்' என்பதனாற் பிரித்து, நகரவொற்றைக் கெடுத்து, அசஞ்சலன்
என முடிக்க. பயம், களங்கம் என இவையும் அவ்விலக்கணத்தான் அபயன்,
அகளங்கன் என முடிக்க. உபமன் என நிறுத்தி, இதனை இல்லாதான்
யாவன்? எனக் கருதியவிடத்து நகரவுயிர்மெய்யை முன்னர் நிறுத்தி,
‘சார்ந்ததுதான் ஆவியேற் றன்னாவி முன்னாகும்' என்பதனாற் பிரித்து
அகரத்தை முன்னர் நிறுத்தி, நகரவொற்றின்மேல் உயிரை ஏற்றி அநுபமன்
என முடிக்க. அகம் என்பது பாவம்; இதனை இல்லாதான் யாவன்? எனக்
கருதிய பொழுது இவ்விலக்கணத்தால் அநகன் என்க. உசிதம் என்பது
யோக்கியம்; அஃது இல்லாதது அநுசிதம் என முடிக்க. வேரம் என நிறுத்தி,
இதன் முதிர்ச்சி யாது? எனக் கருதிய
-----------------------
1. பிரயோக விவேகம், சமரசப்படலம், 4-ஆம் சூத்திர உரையில்
அந்நூலாசிரியர், இச்சூத்திரத்தின்,
‘நேர்ந்த மொழிப்பொருளை நீக்க வருநகரம்
சார்ந்த துடலாயிற் றன்னுடல்போம் - சார்ந்ததுதான்
ஆவியேற் றன்னாவி மூன்னாகும்'
என்னும் பகுதியை எடுத்துக் காட்டி, என்பதனான் அகளங்கன்,
அநங்கன் எனவும், அப்பிரமணன், அநச்சுவன் எனவும், அதன்மம்
எனவும் முறையே இன்மை, அன்மை, எதிர்மறை மூன்றினும் நஞ்ஞு
வரும்' என்றதனை ஈண்டு நோக்குக.
|