|
கூட்டி, மண்ணழகிது, கம்மழகிது, டொன்னழகிது, மெய்யழகிது,
சொல்லழகிது, தெவ்வழகிது, முள்ளழகிது என முடிக்க. பிறவும் அன்ன.
வேய், உகாய், கதிர், சேர், பாழ், யாழ் என நிறுத்தி, வல்லெழுத்து
முதலாகிய சொற்களை வருவித்து வேய்த்தோள், உகாய்ப்பழம்,
கதிர்ச்செந்நெல், சேர்ம்பழம், பாழ்ங்குடில், யாழ்க்கோடு என முடிக்க.
என்னை?
யரழ வென்னும் மூன்று மொற்றக்
கசதப ஙஞநம வீரொற்
றாகும்.
(தொல். மொழிம. 15)
என்பவாகலின்.
‘பெயர்த்து' என்று மிகுத்துச் சொல்லியவதனான் வினைச்
சொல்
வந்தவிடத்து யரழ ஒற்றுக்கள் இயல்பாய் முடியும். அவை வருமாறு:
செய்காத்தான், நீர்கொண்டான் என வரும்.
‘பெயர்த்து' என்று மிகுத்துச் சொல்லியவதனாற்
போலும், மருளும்
என்னும் இருமொழிகளினும் லகர ளகரங்களின் ஏறி நின்ற உகர உயிர்
கெட்டு, இறுதியில் நின்ற மகரவொற்றானே, லகர ளகரங்கள் னகர
ணகரங்களாய்ப் போன்ம், மருண்ம் என ஈரொற்றாய் நிற்கும்; இவ்விடம்
மகரக்குறுக்கம் என அறிக.
ணனவின் முன்னர் மகரங் குறுகும்
என்பவாகலின்.
‘பின்' என்ற மிகையான், யரழக்கள் வல்லெழுத்து
வாராதே
மெல்லெழுத்து வந்து ஈரொற்றாவனவும் உள; அவை மெய்ம்மொழி,
பொய்ம்மதி, செய்ந்நீண்டது 1 என ஆம்.
இயல்பு சந்தியாவன: குவளை தவளை என நிறுத்தி, மலர்,
வாய்
என வருவித்துக் குவளை மலர், தவளைவாய் என முடிக்க.(15)
-----------------------
ஈண்டு யகரத்தின்முன் மெல்லெழுத்து மிகுதற்குக்
காட்டப்பட்ட உதாரணங்கள் நன்னூல் உயிரீற்றுப் புணரியல் 8 ஆஞ்
சூத்திரதிற் கூறப்பட்ட ‘குறில் வழி யவ்வின் முன் மெலி மிகலுமாம்'
என்னும் விதியின் அமைவனவாகும். ஈண்டு ரகர ழகரங்களின் முன்
மெலி மிகுதற்கு உதாரணங்கள் காட்டப்பட்டில. அவற்றிற்குத் தொல்.
எழு. தொகை மரபு. 3-ஆம் சூத்திர உரையில் நச்சினார்க்கினியர்
காட்டிய கதிர்+ஞெரி=கதிர்ஞ்ஞெரி, இதழ்+ஞெரி=இதழ்ஞ்ஞெரி
என்பவற்றை உதாரணமாகக் கொள்க.
இளம்பூரணர் இவற்றுள் முன்னதனை மாத்திரம் உதாரணமாகக்
காட்டினார்.
|