பக்கம் எண் :
 
எழுத்து அதிகாரம்25

      இனிக் குரங்கு, கழஞ்சு, நஞ்சு, எண்கு, மருந்து, கரும்பு, அன்பு என

நிறுத்தி, ஏற்ற சொற்களை வருவித்துக், குரக்குவிரல், கழச்சுக்கோல்,
நச்சுக்குழல், எட்குக்குட்டி, மருத்துப்பை, கருப்பு வேலி, அற்புத்தளை,
குரக்கிறைச்சி, கழச்சிற்பாதி, நச்சறை, எட்கீரல், நத்தின்கோடு, கருப்பிலை,
அற்புறுத்தல் என வரும். பிறவும் அன்ன.

       அவையே வினைச்சொல் வந்தால் குரங்கு வந்தது, கழஞ்சு
கொண்டார், எண்கு கரிது, மருந்து பறித்தது, கரும்பு கிழித்தது, அன்பு
பெரிது என இயல்பாயினவாறு கண்டுகொள்க.

       கதவு என முற்றுகரத்தை நிறுத்தி, உயிர் முதலாகிய சொல்லை
வருவித்து, இவ்விலக்கணத்தான் உகரத்தை அழித்து, உயிரை ஏற்றிக்
கதவழகிது என முடிக்க. பிறவும் அன்ன.                        
(14)

          
 சில ஒற்றுஈற்றுப் புணர்ச்சியும், இயல்பு புணர்ச்சியும்

15.    குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கள்
      நிற்கப்பின் வல்லெழுத்து நேருமேல் -- ஒற்றாம்
      பிணைந்த வருக்கம் பெயர்த்தியல்பு சந்தி


இணைந்தபடி யேமுடியு மேய்ந்து.

     
எ - ன்:  ஒரு சார் ஒற்றீறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 
    
 இ - ள்: தனிக் குற்றெழுத்தின்பின் நின்ற ஒற்றுக்கள் வருமொழிக்கு
முதலாக யாதானும் ஓருயிர் வரின், அவ்வொற்றிரட்டித்து, வந்த உயிர் ஏறி
முடியும்; நிலை மொழி இறுதியில் நின்ற யரழ ஒற்றுக்குப் பின்னாக
வல்லெழுத்து வரின், தன் வர்க்கத்து வல்லொற்றாதல் மெல்லொற்றாதல்
மிக்கு ஈரொற்றுடனிலையாய் முடியும் என்க; இயல்புசந்திகள் விகாரப்படாது
நிலைமொழியும் வருமொழியும் நிறுத்தியபடியே நின்று முடியும் எ - று.

   
 வ - று: மண், கம், பொன், மெய், சொல், தெவ், முள், என நிறுத்தி,
அழகிது என உயிர் முதலாகிய சொற்களை வருவித்துக், ‘குற்றொற்றிரட்டு
முயிர்வந்தால்' என்பதனான் ஒற்றை  இரட்டித்துச்,  ‘செம்மை உயிரேறுஞ்
செறிந்து'1 என்பதனான் மெய்யொடு உயிரைக்
-------------------------
1, இந்நூலின் இவ்வதிகாரம், சூ, 4.