பக்கம் எண் :
 
4நேமி நாதம்

எழுத்ததிகாரம்


முதல் வைப்பாகிய முதல் எழுத்துக்களின்

பெயரும், முறையும், தொகையும் 1


1.    ஆவி அகரமுதல் ஆறிரண்டாம் ஆய்தமிடை
     மேவுங் ககரமுதன் மெய்களாம் - மூவாறுங்
     கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
     நண்ணுமுதல் வைப்பாகு நன்கு.

     என்பது சூத்திரம்2. என்னுதலிற்றோ? எனின்: முதல் வைப்பாகிய
முப்பத்தோரெழுத்தும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 
 
  இ-ள்: அகரமுதல் ஒளகார மீறாய்க் கிடந்த பன்னிரண்டும் உயிர்
எனப்படும;் அதன் இடையிற் கிடந்த எழுத்து ஆய்தம் எனப்படும்; 
ககரமுதல் னகரமீறாய்க் கிடந்த பதினெட்டும் மெய் எனப்படும் என்பது.
என்னை?

       
   அகர முதலாக ஆய்தம் இடையா
           னகரமீ றாகுமுதல் வைப்பு 


என்றாராகலின்.


 முதல் எழுத்துக்களின் வகை


2.   ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்
     ஏன்றமெய்ம் மூவாறும் எண்ணுங்கால்.......ஊன்றிய

-----------------------
1.  தொல். எழுத்ததிகாரத்தில் உள்ள   ‘எழுத்தெனப்படுப' என்னும்
சூத்திரத்தின் கருத்துரையில் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும்

‘இத்தலைச் சூத்திரம் என்நுதலிற்றோ? எனின், எழுத்துக்களது
பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் நுதலிற்று' என்று
கூறியதை ஈண்டு நோக்குக.


2,  சூத்திரம், நூற்பாவானே யன்றி, ஆசிரியத்தானும், வெண்பாவானும்
இயற்றப்படும் என்றார் பேராசிரியர். அதனை, தொல். பொருள்.
மரபியல்.100-ஆம் சூத்திர விசேட உரையில். அவர்  செய்யுள்
என்றான். அடிவரைச் செய்யுளின் வேறுபட்ட பொருட்பாட்டிற்றாகிய
அடிவரைப்பாட்டினுட் சிறப்புடைய ஆசிரியத்தானும், வெண்பாவானும்
செய்யப்படும் சூத்திரம் என்றற்கு என்பது  என்றதனால் அறிக.