வன்மையே மென்மை இடைமையாம் வாட்கண்ணாய் தொன்மை
முயற்சியாற் றொக்கு.
எ-ன்:
உயிரையும் மெய்யையும் வகுத்துணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்:
உயிர் பன்னிரண்டனுள்ளும் அ இ உ எ ஒ என்ற ஐந்தும்
குற்றெழுத்தாம்; ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற ஏழும் நெட்டெழுத்தாம்;
மெய் பதினெட்டனுள்ளும், க ச ட த ப ற என்பன வல்லினமும், ங ஞ ண
ந ம ன என்பன மெல்லினமும், ய ர ல வ ழ ள என்பன இடையினமுமாம்
எ-று.
என்னை? வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற இத்துணை
அல்லது அவை இவை உவை என்றதில்லையோ? எனின், உரையிற் கோடல்
என்னுந் தந்திரவுத்தியாற் பெறப்பட்டவாறு; அன்றியும், தொன்மை
முயற்சியாற் றொக்கு என்பதனாலும் பெறப்பட்டவாறு. என்னை? ‘பணி
செய்தார்க்குக் கூலி கொடு' என்றாற் பணி கண்டு கூலி கொடுப்பர்; அது
போல எனக்கொள்க. வல்லினம் கன்மேல் விரல் இட்டாற் போலவும்,
மெல்லினம் மணன்மேல் விரல் இட்டாற் போலவும், இடையினம் மண்மேல்
விரல் இட்டாற் போலவும் எனக் கொள்க.
(2)
இரண்டாம் வைப்பாகிய சார்பெழுத்துக்களின்
பெயரும், முறையும், தொகையும், வகையும் 1
3. ஓங்குயிர்கள் ஒற்றின்மேல் ஏறி உயிர்மெய்யாய்
ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும் - பாங்குடைய
வல்லொற்று மெல்லொற்று வர்க்கம் 2 அளபெடைகள்
சொல்லொற்றி நீட்டத் தொகும்.
-------------------------
1. தொல். எழு. 2-ஆம் சூத்திரக் கருத்துரையிலே இளம்பூரணரும்,
நச்சினார்க்கினியரும் கூறியவற்றை ஈண்டு நோக்குக.
2. ஈண்டு வருக்கம் என்று தற்பவமாகக் கூறின் தளை கெடுதல்
நோக்கி
வர்க்கம் எனத் தற்சமமாகக் கூறினார். இந்நூலின் உரை
ஆசிரியர் இதனை
வருக்கம் எனத் தற்பவமாகவே கூறினார். பிரயோக
விவேக நூலாசிரியர்,‘நேமிநாதத்தார், வருக்கத்தொற்று, வருக்க
மளபெடைகள் என்னாது;வடமொழியிற் பிறந்தவண்ணமே
வர்க்கத்தொற்று, வர்க்கமளபெடைகள்
என்றாற்போல யாமும்
கருமதாரயன் என்னாது, கர்மதாரயன் எனத்
தற்சமமாகக் கூறினாம்'
என்றது ஈண்டு நோக்கற்கு உரியது.
|