திணை பால்களின் வழு வமைதி
8. ஐயம் திணைபாலிற் றோன்றுமேல் அவ்விரண்டும்
எய்தும் பொதுமொழியால் ஈண்டுரைக்க - மெய்தெரிந்தால்
அன்மை துணிபொருண்மேல் வைக்கஒரு பேர்ப்பொதுச்சொல்
பன்மைசிறப் பாலுரைத்தல் பண்பு.
எ - ன்:
திணை ஐயமும் பால் ஐயமும் தோன்றினவழிச் சொல்
நிகழுமாறும், ஐயந் தீர்ந்தாற் சொல் நிகழுமாறும், ஒருபெயர்ப் பொதுச்சொல்
ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
உயர்திணையோ? அஃறிணையோ? என்று ஐயம் தோன்றிய
இடத்தும், ஒருவனோ? ஒருத்தியோ? என்று ஐயந் தோன்றிய இடத்தும்,
ஒன்றோ? பலவோ? என்று ஐயம் தோன்றின இடத்தும், ஐயப்பட்ட பொருள்
இரண்டிற்கும் உரித்தாகச் சொல்லுக; இவ்வையந் தீர்ந்த வழிப் பிறக்கும்
அன்மைச் சொல்லைத் துணிந்த பொருள் மேல் ஏற்றிச் சொல்லுக. ஒரு
பெயர்ப் பொதுச்சொற்களைப் பன்மையாலும் தலைமையாலும் பெயர்
கொடுத்துச் சொல்லுக எ - று.
அவை வருமாறு: குற்றி கொல்லோ? மகன் கொல்லோ தோன்றுகின்ற
உரு என்றும், ஒருவன் கொல்லோ? ஒருத்தி கொல்லோ? தோன்றுகின்ற
அவர் என்றும், ஒன்று கொல்லோ? பல கொல்லோ? பைங்கூழ் மேய்ந்த
பெற்றம் என்றும் உரைக்க. அவை துணிந்தாற் குற்றியல்லன் மகன் என்றும்,
மகன் அன்று குற்றி என்றும், ஒருவன் அல்லள் ஒருத்தி என்றும், ஒருத்தி
யல்லன் ஒருவன் என்றும், ஒன்றல்ல பல என்றும், பல அன்று ஒன்று
என்றும் உரைக்க. என்னை?
தன்மை சுட்டலும் உரித்தென மொழிப
அன்மைக் கிளவி வேறிடத் தான.
(தொல். கிளவி.25)
என்றாராகலின்.
ஒரு பெயர்ப் பொதுச்சொல்லாவன: தோட்டம், சேரி, காடு,
நாடு
முதலியன. இஞ்சித் தோட்டம் மஞ்சள் தோட்டம் என்பன பன்மையாற்
பெயர் பெற்றன. மாந்தோட்டம், பலாத்தோட்டம் என்பன தலைமையாற்
பெயர் பெற்றன. கமுகந்தோட்டம்,
|