பக்கம் எண் :
 
சொல் அதிகாரம்55

      கொடிறும் பேதையுங் கொண்டது விடா  1


எனவும், இவை உயர்திணையையும் அஃறிணையையுங்கூட எண்ணி
அஃறிணையாலே முடிந்தன.

    
 பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெயர்
     அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே   
    (தொல்.கிளவி. 51)


என்றாராகலின்.


     இனி, ஆவும் ஆயனுஞ் செல்க, யானையும் பாகனும் வருக என
இருதிணையும் எண்ணி வியங்கோளிடத் தொத்தன. வியங்கோளாதல்,
ஏவுதல், என்னை?
     

      வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார 

(தொல்.கிளவி. 45)

 

என்றாராகலின்.
 
    
 யானுமென் னெஃகமுஞ் சாரு மவனுடைய
      யானைக்குஞ் சேனைக்கு நேர் 

எனவும்,


   
 ஆழியா யானா வநங்கனா யென்னுடைய
     தோழியா யூர்கா வலன்றுடியாய் - வாழி
     புறங்காவ லாகும் புனலே சூழ்நாட்டில்
     உறங்கா தமைவே முளேம் 


எனவும், அஃறிணையையும் உயர்திணையையும் தன்மையோடே கூட்டித்
தன்மையாயினவாறு கண்டுகொள்க. என்னை?

   
 தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென்
    றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார் 
(தொல். கிளவி.43)

என்றாராகலின்.

   
  தன்மையோ டிசைந்தன தன்மை யாகும்
     முன்னிலை மொழியொடு படர்க்கையு மற்றே 


     அவை வருமாறு: நீயு நின் படைக்கலமுஞ் சாரீர்; அவனுந் தன்
களிறுஞ் சாரும்.

      மேலைச்சேரி வென்ற தென்றாற் கீழைச்சேரி தோற்றதென்பது
சொல்லாமல் முடிந்தது. இது அருத்தாபத்தி.
-------------------------
1. திருவாசகம். போற்றி. அடி. 63.