பக்கம் எண் :
 
66நேமி நாதம்

      எ - சூ.  இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், வேற்றுமை
மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம்
என்னுதலிற்றோ? எனின், வேற்றுமைகட்குப் பெயரும் முறையும் தொகையும்
பொது இலக்கண மாமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: பெயரும் முறையும் தொகையும் அவை தாமே;
வேற்றுமைகளிற் பெயர்வேற்றுமையின்பின் பெயர் ஒழிந்த ஏழும் தமக்கேற்ற
பொருட்கு ஈடாக வரும் எ - று.

     ‘தோற்றும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் வேற்றுமைகளை ஏலாத
பெயரும் திரிந்தேர்க்கும் என்றவாறு.

    
 எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றிய
      யவ்விய நிலையல் செவ்வி தென்ப.     
(தொல். வேற். எ.)

     
வ - று: யான் என்பது என்னை என்னொடு எனக்கு எனவும், யாம்
என்பது   எம்மை எம்மொடு எமக்கு எனவும், நாம் என்பது நம்மை
நம்மொடு நமக்கு எனவும் இவை தன்மை; நீ என்பது நின்னை நின்னொடு
நினக்கு எனவும், நீர் என்பது நும்மை நும்மொடு நுமக்கு எனவும் இவை
முன்னிலை; தான் என்பது தன்னை தன்னொடு தனக்கு எனவும், தாம்
என்பது தம்மை தம்மொடு தமக்கு எனவும் இவை படர்க்கை; இவ்வாறு
தன்மையினும், முன்னிலையினும், படர்க்கையினும் இவை திரிந்து ஏற்றபடி
அடைவே கண்டுகொள்க.                                     
 (1)
      

முதல் வேற்றுமை
      


17. பெயர்எழுவாய் வேற்றுமையாம் பின்பதுதான் ஆறு
   பயனிலையும் ஏற்கப் படுதல் - கயல்விழியாய்
   ஈற்றின் உருபாறும் ஏற்றல்முக் காலமும்
   தோற்றாமை நிற்றல் துண்பு.

    
எ - ன்: எழுவாய் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.