பக்கம் எண் :
 
70நேமி நாதம்

ஆறாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும்



20. அதுஎன்ப தாறாம் உருபாம் இதன
   திதுவென் கிழமையிரண் டெய்தும் - விதிமுறையாற்
   கண்ணென்ப தேழாம் உருபாகுங் காலநில
   நண்ணும் வினையிடத்து நன்கு.

    
எ - ன்: ஆறாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

    
இ - ள்: அது என்பது ஆறாம் வேற்றுமை; அது தான்
தற்கிழமையினும் பிறிதின்கிழமையினும் இதனது இது என்று நிற்கும். கண்
என்பது ஏழாம் வேற்றுமை: அது காலத்தையும், வினைசெய் இடத்தையும்,
நிலத்தையும் பற்றி வரும் எ - று.

    
வ - று: சாத்தனது வாள், கொற்றனது வேல்; இவை பிறிதின்கிழமை.

     தற்கிழமை ஐந்து வகைப்படும், ஒன்று பல குழீஇய தற்கிழமையும்,
வேறு பல குழீஇய தற்கிழமையும், ஒன்றிய தற்கிழமையும், உறுப்பின்
தற்கிழமையும், மெய்திரிந்தாகிய தற்கிழமையும் என. அவை வருமாறு: ஒன்று
பல குழீஇய தற்கிழமை, எள்ளது குப்பை. வேறு பல குழீஇய தற்கிழமை,
படையது குழாம். ஒன்றிய தற்கிழமை, நிலத்தது அகலம். உறுப்பின்
தற்கிழமை, யானையது கோடு. மெய்திரிந்தாகிய தற்கிழமை, எள்ளது சாந்து.
பிறவும் அன்ன.

 
      ‘விதிமுறையால்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் அது என்பது
விகாரப்பட்டு ஆது என்று நின்று நினது குதிரை, நினாது குதிரை, எனது
வேல், எனாது வேல் என வரும். ஆறாம் வேற்றுமை அகரமாய் நிற்கவும்
பெறும். அது வறுமாறு: உத்திய கண் கரிய, கோளரிய கண் பெரிய,
யானைய  கோடு பெரிய, ஆனேற்ற கோடு கூரிய என்பன. பிறவும் அன்ன.

     ஏழாம் வேற்றுமை உருபு கண் என்றாராயினும், பலவும் இடப்
பொருளைப் பற்றி வரும். அவை: கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ்,
மேல், பின், சார், அயல், புடை, தேவகை, முள், இடைகடை, தலை, வலம்,
இடம்  இவை முதலாயின. அவை வருமாறு: ஊர்க்கண் இருந்தான்,
ஊர்க்கால் இருந்தான், ஊர்ப்புறத்திருந்தான், கையகத்துள்ளது கொடுத்தான்,
ஊருள் இருந்தான், சான்றோருழை இருந்தான், மாளிகைக்கீழ் இருந்தான்,
மாளிகை மேல் இருந்தான்,