பக்கம் எண் :
 
72நேமி நாதம்

      இ  - ள்: ஒரு வேற்றுமைக்கு உரிய இடத்தே, பிறிதொரு வேற்றுமை
தோற்றவும் பெறும்; வேற்றுமையுருபு தொக்கு நிற்கவும் பெறும்; வேற்றுமைப்
பொருளை எதிர் மறுத்துச் சொன்னாலும், அவ் வேற்றுமையாயே நிற்கவும்
பெறும்; ஆறாம் வேற்றுமையானது தன்னை யொழியப் பிறிதினை ஏற்கவும்
பெறும் எ-று.

     அவற்றுட் சில வருமாறு: தூணைச் சார்ந்தான் என்புழித், தூணின்கட்
சார்ந்தான் என்றும், அரசரைச் சார்ந்தான் என்புழி, அரசர்கட் சார்ந்தான்
என்றும், வாணிகத்தின் ஆயினான் என்புழி, வாணிகத்தான் ஆயினான்
என்றுமாம். காட்டது யானை என்புழி, காட்டுள் யானை என்றும், நாகரது
பலி என்புழி, நாகர்க்குப் பலி என்றுமாம்.  கள்ளரின் அஞ்சும் என்புழிக்
கள்ளரை அஞ்சும் என்றுமாம். பிறவும் அன்ன.

      இனி உருபு தொக்கது; நிலத்தைக் கடந்தான் என்புழி, நிலங்கடந்தான்
என்றும், தாயொடு மூவர் என்புழித் தாய் மூவர் என்றும், நாகர்க்குப் பலி
என்புழி நாகர் பலி என்றும், வரையின் வீழருவி என்புழி வரை வீழருவி
என்றும், தேங்கினது காய் என்புழித் தேங்காய் என்றும், குன்றத்துக்கட்
கூகை என்புழிக், குன்றத்துக் கூகை என்றும் அடைவே ஆறுருபும்
தொக்கவாறு கண்டுகொள்க.

      அறத்தை நோக்கும் என்புழி அறத்தை நோக்கான் என்றும், கோலால்
அளக்கும் என்புழிக் கோலால் அளவான் என்றும், சாத்தற்குக் கொடுக்கும்
என்புழிச் சாத்தற்குக் கொடான் என்றும்,  கள்ளரின் அஞ்சும் என்புழிச்
கள்ளரின் அஞ்சான் என்றும், கொற்றனது வேலாம் என்புழிக் கொற்றனது
வேலன்று என்றும், மன்னர்கட் செல்லும் என்புழி மன்னர்கட் செல்லான்
என்றும் வேற்றுமைப்பொருளை எதிர் மறுத்துச் சொன்னவிடத்தும்
வேற்றுமை அழியாது ஏற்றவாறு அடைவே கண்டுகொள்க.

     சாத்தனது என்புழிச் சாத்தனதனை என்றும், சாத்தனதனான் என்றும்,
சாத்தனதற்கு என்றும், சாத்தனதனின் என்றும், சாத்தனதன்கண் என்றும்
இவை ஆறாம் வேற்றுமையிற் பிறிது வேற்றுமை ஏற்றவாறு கண்டுகொள்க.
பிறவும் அன்ன.

     ‘தேறவரும்' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், இரண்டு பொருளை
ஒக்க  வினைகொடுத்துச் சொல்லுமிடத்து, ஒடுச் சொல்லினை உயர்ச்சியின்
பின் வைத்துச் சொல்லுக. என்னை?