பக்கம் எண் :
 
88நேமி நாதம்

      தாமென் கிளவி பன்மைக் குரித்தே        (தொல். பெய. 30)
      தானென் கிளவி யொருமைக் குரித்தே                 (31)

என்றாராகலின்.

     நீ வந்தாய் என்பது ஒருவனையும், ஒருத்தியையும், ஒன்றனையும்; நீயிர்
வந்தீர் என்பது பலரையும், பலவற்றையும் விளக்கும். என்னை?
 
    
 நீயிர் நீயென வரூஉங் கிளவி
     பால்தெரி பிலவே யுடன்மொழிப் பொருள 
                                         (தொல். பெய. 34)
      அவற்றுள்,
      நீயென் கிளவி யொருமைக் குரித்தே      
                                                    (35)
     ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே.                   (36)
     

             பிறவும் அன்ன, நீ, நீயிர் என்பன முன்னிலையாகவும், அல்லாதன
படர்க்கையாகவுங் கொள்க.                                    
 (6)

பெயர்கள் திரிந்து வருமாறு

36. பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுஓடாம்
    நீராகு நீயிர் எவனென்ப - தோருங்கால்
    என்என்னை என்றாகும் யாமுதற்பேர் ஆமுதலாம்
    அன்ன பொழுதுபோ தாம்.

     
எ - ன்: பழையவாய் நடைபெற்றுவருஞ் சொற்களிற் றிரிந்து
நடப்பனவற்றை வழுவல்ல என்று அமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

    
இ - ள்: பெயர் என்னுஞ் சொல் பேர் என்றும், பெயர்த்து என்னுஞ்
சொல் பேர்த்து என்றும், ஒடு என்னுஞ் சொல் ஓடு என்றும், நீயிர் என்னுஞ்
சொல் நீர் என்றும், எவன் என்னுஞ் சொல் என் என்றும் என்னை
என்றும்,  பொழுது என்னுஞ் சொல் போது என்றும் திரிந்தன; யா முதற்
பெயர் ஆ முதலாயும் வரும் எ-று.

     அவை வருமாறு: யானை, யாறு, யாமை, யாடு, யார், யார்த்தல் என்பன
யா முதல் திரிந்து ஆனை, ஆறு, ஆமை, ஆடு, ஆர்த்தல் என ஆ
முதலாயின. இவை வழுவல்ல என்க. பிறவும் அன்ன.