நிகழூஉ நின்ற பால்வரை கிளவியி
னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே
யன்ன மரபின் வினைவயி னான
(தொல். பெயர். 19)
என்றாராகலின்.
(9)
பெயர் மரபு முற்றும்
-----
ஆறாவது வினை மரபு
வினைச் சொல்லின் பொது இலக்கணம்
39. இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்கள் ஏற்றும்
குறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய்
முற்றெச்ச மென்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து
நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து.
என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின்?
வினைமரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம்
என்னுதலிற்றோ? எனின்; வினைச்சொற்களுக்குப் பொது இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்னும்
காலங்களை ஏற்றுவரும் வினைச்சொல்லாகியும், காலம் விளங்காது நிற்கும்
வினைக்குறிப்புச் சொல்லாகியும் உருபேலாத தன்மையவாகியும், வினைமுற்றுச்
சொல்லும் வினையெச்சச் சொல்லும் என்று சொல்லப்பட்ட
உயர்திணைவினையும் அஃறிணைவினையும் விரவுவினையுமாகித், தன்மை
முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தும் நடக்கும் வினைச்சொல் எ-று.
என்னை?
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் (தொல். வினை. 1)
காலந் தாமே மூன்றென மொழிப
(2)
|