உயிரளபெடை வரும் காரணம் இந்நூற்பாவில் இடம் பெறாததால் மரபு பற்றி உரையில் பெய்து கொள்ளப்பட்டது. இயல், இசை, நாடகம் என்னும் முக் கூற்றுத் தமிழும் முறையே ஒன்றைவிட அடுத்தது எளிமையாக இருத்தல் வேண்டும் என்பது இவர் கோட்பாடு. “இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ்ச் சொல் பொதிய மால்வரைப் பொழிலென இருண்டும், உலவாமுனிவோர் உடையெனச் சிவந்தும், வீழ்புனல் அருவியில் வெளுத்தும் தோன்றும்,,,,, ,,, ,,, “1 “வீணையில் தேர்ந்தோன் விளம்பும் மாற்றம் தழீஇக்கொளல் நாடகத் தமிழினுக்கு அழகே ஆயினும் பொருட்சுவை அழியினும் இயல்இசைச் சொல் மிகப் புணரினும் சோர்வுபடுமே”2 என்னும் நூற்பாக்களால் இது தெளிவாகிறது. | வண்ணப் பாடல்களில் அளபெடை வந்தால் அது குழிப்பிற்கேற்ப இயைபாக அமையாதாதலின் அவைகளில் அளபெடுத்தல் நீக்கப்பட்டது. “வண்ணத் தளவில் வடமொழி மரூஉச்சொல் புல்லினும் மதுரப் பொலிவு குன்றலும், குழிப்புச் சிதைவும் கொடுந்தமிழ்ப் புணர்ப்பும், அளபெடைச் சேர்க்கையும் ஆகா அன்றே”3 என்பது வண்ணத்தியல்பு, என்றாலும் மிச் சிறுபான்மையாக, “ஆகா அளபெடை அணையினும் அம்முறை துள்ளல் தோறும் துலக்கவல்லானேல் அஃதும் ஓர் சிறப்பு என்று அறைவார் சிலரே”4 என ஏற்கிறார். (163) | 164. | ஒற்றினை இரட்டித்து இஃதும்ஓர் அளபெடை | | என்பார் உளர்எமக்கு இனிதுஅஃது அன்றே. |
| ஒரு மெய்யெழுத்தையே இருமுறை எழுதி இது ஒற்றள பெடை என வேண்டுகின்ற ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் யாம் அதனை விரும்பேம் என்றவாறு. | “கண்ண் டண்ண்ணெனக் கண்டும் கேட்டும்”5 என்பன போன்ற ஒற்றளபெடைகள் இலக்கியங்களுள் மிகமிக அரிதாகவே பயின்று வருகின்றன. இலக்கண நூல்களில் மேற்கோளாகக் காட்டப்படும் செய்யுள்கள் அனைத்தும் உரையாசிரியர்களால் இலக்கணத்தை விளக்கவேண்டியே இயற்றப்பட்டனவாகும். | |
|
|