அவை இயற்கையாயெழுந்த இலக்கியங்கள் அல்ல. மேலும் அத்தகைய ஆட்சியும் பிற்காலத்தே இறந்தொழிந்தது. எனவே) இவ்வாசிரியர் இறந்தது விலக்கல் என்னும் உத்திபற்றி ஒற்றளபெடையை வேண்டராயினார். (164) |
165. | பல்எனும் மொழியொடு தலையெனல் புணர்கால் | | பஃறலை ஆதலும், அருணையும் புரியும் | | அருணா புரியென்று அவிர்தலும், குசவன் | | குயவன் ஆதலும், வரியும் குயிலும் | | வரிக்குயில் ஆதலும் அன்னவை பிறவும் | | பொதிய மால்வரைப் புகழ்பொரு புலமைச் | | சீரியர் தம்பால் தெரிவது முறையே. |
|
பல் + தலை = பஃறலை, அருணை + புரி = அருணாபுரி, வரி + குயில் = வரிக்குயில் போன்ற புணர்ச்சி பேதங்களும், குசவன், குயவன் போன்ற மரூஉ மொழிகளும் போன்றவைகளைப் புகழ்பெற்ற பெரும்புலவர்களின் இலக்கிய வாயிலாகவே அறிந்து கொள்ளல் தக்கதாம் என்றவாறு. |
“குறில்வழி லளத்தவ் வணையின் ஆய்தம் ஆகவும் பெறூ உம் அல்வழியானே”1 என்னும் விதி பற்றி பஃறலை வந்தது அருணை என்னும் சொல்லோடு புரி புணர்ந்து அருணாபுரி ஆயிற்று என்பது அத்துணை இயைபுடையதாகத் தோன்றவில்லை. இரண்டும் வடமொழிச் சொற்கள். அருண, புரி என்ற இரண்டும் அருணபுரி என்றே வடமொழியில் இயல்பாகப் புணர்ந்து, நீட்டல் விகாரம் பெற்று அருணாபுரி என ஆயிற்று எனக் கோடலே சிறப்பாம். “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்”2 ஆதலின் வரிக்குயில் எனக் ககரம் மிக்கது. இவ்விதி இந்நூலில் சொல்லப்படாததால் இங்கு உதாரணத்தால் காட்டினார். குயவன் என இருத்தற்பாலது பேச்சுவழக்கில் குசவன் என மருவச் சிறுபான்மை இலக்கியத்தும் இடம்பெற்றுவிட்டது. (165) |
புணர்ச்சி இயல்பு முற்றிற்று, |
எழுத்திலக்கணம் முற்றுபெற்றது. |
ஆகச் சூத்திரம் 165, |
|