| வடமொழியின் குறிலைத் தமிழ் நேரசையாகவும், நெடிலை நிரையசையாகவும் கொண்டுள்ளனர். மூன்று நெடில்களால் ஆன ‘ம’கணம் எனச் சிதம்பரப்பாட்டியலில் மூன்று நிரையசைகளாகிய கருவிளங்கனி கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறே மூன்று குறில்களாலான வடமொழி ‘ந’கணத்தின் பெயர் மூன்று நேரசைகளானியன்ற தேமாங்காய்ச் சீருக்குத் தரப்பட்டுள்ளது. “வான் இலகு நேர்; குருவே நிரையாம்; வெண்சீர்வரில் நபதவ கணநாள் பரணி மும்மீன் ஊனமிகு புனர்பூசம் பூசம் வாணாள் உற்றபுகழ் சூனியநோய் பலன்கள் ஆகும்; தேன்அனையாய் வஞ்சிச் சீர் அடைவே நான்கும் திகழ் ‘சரமய’ கணநாள் சோதி ஆரல் தானமுறு கேட்டை சதயம்தான் கேடு சாவுதிரு மகிழ்ச்சிபலன் தரத்தொடங்கும்”1 என்பது சிதம்பரப் பாட்டியல். |
| தமிழ் யாப்பமைதிக்குச் சற்றும் தொடர்பே இல்லாத இந்தக் கணம் என்னும் ஒரு வடமொழிக் கோட்பாட்டைக் கொண்டுவந்து தமிழில் பயன் இல்லாமல் நுழைக்க வேண்டாம் என்கிறார் இவ்வாசிரியர். இது இவருடைய அழுத்தமான சொந்தக் கருத்தாக இருந்தபோதிலும் அவர்காலத்தில் இருந்த புலவர்கள் பாட்டியற் கொள்கைகளை மிகவும் உறுதியுடன் பின்பற்ற விரும்பின காரணத்தால் இவர் சற்று விட்டுக் கொடுத்து ஒரு சமயம் கணப்பொருத்தம் பார்க்க வேண்டு மெனில் எக்கடவுளைப் போற்றி, இலக்கியம் பாடப்படுகிறதோ அத்தெய்வத்தின் பெயருள்ள சீரில் தொடங்கலாம் என்கிறார். |
| இது எளிதாக விட்டுக்கொடுப்பது போல் தோன்றினாலும் வடமொழிக் கணமே சிந்தையில் நுழையாதபடி விரட்டுவதாகும். உதாரணமாகச் சிவபெருமான் மீது ஓரிலக்கியம் இயற்றப்படுவதாக வைத்துக் கொள்வோம். இந்த இயற்பெயர் எந்தக் கணத்தில் இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறார். சிவபெருமான் என்ற உடனே தமிழ்ப் புலவனுக்குக் கருவிளங்காய் என்ற தமிழ்ச்சீர் நினைவிற்கு வரு |
|