பக்கம் எண் :
 
002
நூலின் தன்மை
3.கடலின் மீன்பெயர் நுளையர்1வாய் மொழியெனல் கடுக்கும்
 திடம்2நிலாவிய செழுந்தமிழ்ப் புலவரைச் சேர்வார்
 புடவி3மேற்கொளும் அறுவகை இலக்கணப் புதுநூல்
 படஅ ராஉறழ்4சமணரைப் புகழ்ந்துளார் பகையே
(3)
வகையும் துணையும்
4.எழுத்து சொல்பொருள் யாப்புஅணி எனத்திகழ்
 இவற்றுடன் இவைதம்மாற்
 பழுத்து மாமணம் கமழ்தரு புலமையும்
 பகர்வது குறித்துள்ளேன்,
 வழுத்தும் மங்கலம் அறியநீ யென்னது
 வாக்கில்வந்து அருள்இன்னே;5
 கொழுத்து உலாவிய வரிஉடல் பூரம்மேல்6
 கொண்டுள குலமாதே.
(4)
நுவன்ற காரணம்
செந்தமிழ்க் கிரியோன்1 தினந்தொறும் வழிபடும்
கந்தனைக் கதிர்வேற் கரத்துடன் மயில்மேற்