பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்003
கருதிய தவமும், கருணையிற் சிறந்த
சுருதியிற்1 பழகிய தொண்டர்தம் துணைத்தாள்
மலர்தரு துகள்முதல் வயங்கும் மாண்பொருள்
சிலபெறும் தெளிவும், சீரிய புலவோர்
கவிக்கடல் அமுதுஉணும் களிப்பும், கதிர்முன்
குவித்தகை யுடன்தொழும் குழுவினர்2 உறவும்
புன்தலைச் சமணரைப் புலைத்தொழிற் புத்தரை
வென்றுஅகம் குளிர்சீர் விரும்பும் பகையும்
உறுவதால் திகழ்துணிவு ஒன்றால்
அறுவகை இலக்கணம் அறையலுற் றனமே.
4
நூற்பயன்
தனதன தனத்தன தனதானா
6.முதிர்தமிழ் முனிக்கு3 ஒரு துணைபோல்வார்
 முருகுஅவிழ் கடுக்கையன்4 உறவுஆவார்
 விதிர்தரும் அயிற்5குகன் அருள்சேர்வார்
 வினைஎனும் இருட்பிணி அறவாழ்வார்
 கதிர்நடு விழுப்பொருள் அதைநேர்வார்6
 கலிமுழுது ஒழித்துஅகம் மகிழ்கூர்வார்
 அதிர்தொனி அணிக்கவி தருசீர்ஆர்
 அறுவகை இலக்கணம் அறிவாரே.
(6)