பக்கம் எண் :
 
சிறப்புப் பாயிரம்004
சிறப்புப் பாயிரம்
ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும்.
1.மன்னுபுகழ் நெல்லைநகர் வாழ்முருக தாசன்எனப்
 பன்னுதண்ட பாணிப் பரதேசி - உன்னும்
 குறுமுனிவன் தன்அருளால் கூறும்இந்த நூற்பேர்
 அறுவகையி லக்கணம்ஆ மே.
(7)
அரங்குங் கொள்வாரும்
2.ஆறு வகைஎன்று இலக்கணம் பாடி அரியதமிழ்த்
 தேறுநர் போற்றுஉரு மாமலைக் கோவில்1முன் செப்பியதால்
 வீறு சமய நெறிஆறு உடையமெய் வேதமொழி
 கூறும் அவர்கள்எல் லாம்இக ழாதுகைக் கொள்வதுஉண்டே.
(8)
மறுத்தற்கு அரியவர்
3.மூவிரண்டு எழுத்தே2மொழியும் பண்பால்
 அத்தொகை இலக்கணம் அமைவுறப் பாடிப்
 பூமலர் சோலைப் பொதியமால் வரைக்கோன்
 தொண்டர்மெய்ப் புகழ்இடை துலங்க வைத்தமை3
 வம்பு4என மற்றையர் மறுப்பினும் வடிவேற்
 சண்முகன் அடியார் தமக்குஆம் அன்றே.
(9)