5. | எண்ணரிய கவிப்புலவர்க்கு இனியது ஆம்இவ் |
| விலக்கணநூல் பகுப்புஆறும் இயம்பும் முன்னம் |
| வண்ணம்முதல் பலபாடல் கடலில், ஆற்றில், |
| வாவியில் செந் தீயில்இட்டேன்;2 மற்றும் பன்னூல் |
| விண்ணறிய மண்அறிய உலகத் தூடு |
| விளங்கவைத்தேன் நலங்கருதி;3வேந்தர் போல்வார் |
| தண்ணளிஇல் லாத்துறவோர் கெடுபாட் டுள்ளார் |
| தன்மைஎல்லாம் அறிந்துஅறிந்தும் சலிப்புஉற் றேனே. (11) |