மொழி இலக்கணத்தைக் கூறும் இந் நூலுள் மெய்யறிவுக் கொள்கைகளையே கூறும் இப்பகுதி இடம்பெற்றதேன் எனில் ‘புலமைத் தொழிலாற் பொருந்தும் மெய்ப்பயன் மலம்அறக், களையும் மாதவ நிலையே’1 ஆதலின் கூறல் வேண்டும் என்க. | இந் நூற்பாவால் அகப்புறப்பொருள்நிலை ஆகிய இப்பகுதியும் பொருளிலக்கணமும் நிறைவுசெய்யப்பட்டு அடுத்த யாப்பு இலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது, (399) | அகப்புறப்பொருள்நிலை முற்றிற்று, | பொருளிலக்கணம் முற்றிற்று, | ஆகச்சூத்திரம் 399 | |
|
|