பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்261
சொற்கள் என்றது தேமாந்தண்பூச்சீர், தேமாந்தண்பூநலம் முதலிய முப்பத்திரண்டு ஐந்தசைச்சீர்களை, இதுபற்றி இந்நூல் இருநூற்று நாற்பத்தைந்தாம் நூற்பாவில் முன்பு கூறப்பட்டது.
பெரும்பாலான இலக்கண நூல்கள் சூத்திரப்பாவைப் பற்றித் தனியாகக் கூறுவதில்லை, இதனையும் அகவற்பாவாகவே கருதுகின்றனர் போலும், சுவாமிநாதம் மட்டும், “ஒன்று இரண்டு ஆம்அடி நூற்பா”1 எனக்கூறி இது அகவலின் ஆறு வகைகளில் ஒன்று என்கிறது. அந்நூற் கருத்து இந்தநூற் கருத்தோடு ஒன்றியுள்ளமை காண்க., இனி நூற்பா பற்றிய மற்ற ஆசிரியர்களின் கொள்கை அடுத்த சூத்திரத்தில் கூறப்படுகிறது.
(402)
4.ஈரசை மூன்றசை கலந்துநன் னான்கா
 வருவது சூத்திரம் என்பார்; அஃதுஇதற்கு
 அயல்அல என்பதும் அக்கரத்து இயல்பு
 பகரில்அதன் புணர்ச்சி நிலைமாறு படலும்
 பழமை ஆம்எனும் பாவலர் பலரே.
ஈரசைச் சீர்களும் மூவகைச் சீர்களுமாகக் கூடிஓர் அடிக்கு நான்காக வருவது சூத்திரம் ஆகும் எனப் பலர் கூறுவர். அவ்விலக்கணமும் (நான்கு, ஐந்து சீர்கள் இணைந்து அடிக்கு இரண்டாக வரும் எனக்கூறும்) இந்நூல் கொள்கைக்குப் புறம்பானதன்று என்பதும், எழுத்துகளின் அமைப்பைக்கொண்டு கூறின் நான்காகப் பிரிப்பதனால் புணர்ச்சிநிலை மாறும் என்பதும் தொன்றுதொட்ட மரபாகும் எனக் கூறும் புலவர் பலர் உள்ளனர் என்றவாறு,
4, 5 அசைச்சீர் இரண்டு வருவது சூத்திரம் என்ற முறையில் இந்நூற்பாவின் முதல் இரு அடிகளையே அலகிட்டுப் பார்போம், அவை வருமாறு;-
முதல்அடி: கூவிளந்தண்ணிழல், கருவிளந்தண்பூ,
இரண்டாம் அடி: கருவிளந்தண்ணிழல், தேமாந்தண்ணிழல்,