பாகுபடுத்தப்படும் தமிழ்மொழியின் யாப்பை நிறுத் முறையானே கூறுவாம் என்றவாறு, |
அசைகளால் ஆன சீர்களின் வாய்பாடுகள் முன்பே கூறப்பட்டன எனச்சொல்லி அவற்றானியன்ற பாக்களின் இலக்கணம் கூறத் தோற்றுவாய் செய்துகொள்கிறார். அவ்வாய்பாடுகளை உணர்ந்தவர்களே யாப்பை அறியவும் சுவைக்கவும் முடியும். எனவேதான் உணர்வாய் மகிழ்வுற என்றார். (401) |
1. இயற்றமிழ் |
சூத்திரப்பா |
3. | அரும்பொருள் விரிப்பதற்கு ஆனசூத் திரப்பா | | நிழல், பூ ஈற்றுஉள நான்கசைச் சொற்கள் | | இணைந்தும் ஒவ்வோர் இடத்தே நலம்சீர் | | ஈற்றுள ஐந்துஅசைச் சொற்கள் வந்தும் | | ஓரடி யாகும்; ஒருபாட்டு இத்தனை | | அடிஎனும் அளவுஉறா; மோனையும் எதுகையும் | | பிறழும்; ஓர் இடத்தில் பிறங்கினும் பிறங்கும்; | | நடுவரும் மோனை நலம்ஆம் அன்றே. |
|
அரிய பொருள்களை விளக்குவதற்காக அமைந்த சூத்திரப்பா, நிழல், பூ என்னும் வாய்பாடுள்ள நாலசைச் சீர்கள் இரண்டு சேர்ந்ததும், சிற்சில இடங்களில் நலம், சீர் என்னும் வாய்பாடுள்ள ஐந்தசைச் சீர்களும் வந்ததும் ஓர் அடியாகும். ஒரு பாட்டிற்கு இத்தனை அடிகள் வரவேண்டும் என்ற வரையறை இல்லை. பொதுவாக நூற்பாக்களில் எதுகையும் மோனையும் சரியாக அமைந்திரா. சிற்சில இடங்களில் அவை அமையினும், எதுகை இல்லாவிடினும் அடியின் நடுவில் மோனை அமைவது சிறப்பாகும் என்றவாறு, |
இவ்வாசிரியர் சீர்கள் என்பதற்குப் பெரும்பாலும் சொற்கள் என்றே கூறுவார். அப்பெயரீடு மயக்குமாதலின் உரையில் சீர்கள் எனவே சொல்லப்படும் நிழல், பூச்சீர்கள் என்றது தேமாந்தண்பூ முதலிய பதினாறு பொதுச்சீர்களை. ஐந்தசைச் |