பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்259
வரையறை செய்து கூறவில்லை, ஏழாமிலக்கணத்திலும் இது கூறப்படவில்லை, ஆனால் இவரால் இயற்றப்பெற்றுள்ள முத்தமிழ்ப் பாமாலை என்னும் நூலை ஆராய்ந்தால் இவர் அகவல், வெண்பா மருட்பா, குறளடிவஞ்சிப்பா ஆகிய நான்கு பாக்களை இயற்றமிழ் எனக்கொண்டிருக்கிறார். அப்படியே ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, தாழிசை, கட்டளைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, சந்த விருத்தம் என்பன இசைத் தமிழாகக் கொள்ளப்பட்டுள்ளன, இந்த அடிப்படையில்தான் இவ்வுரையில் இயலிசைப் பகுப்புக் கூறப்படும்.
1.காப்புஉறு பச்சிலைக் கடவுளைக் காவிஅம்
 பூப்புனை கையுடைப் பூவையைப் புதுத்தினை
 மாப்பிசைந்து அருளிய வள்ளியை வாழ்த்தி
 யாப்பிலக் கணம்சிறிது இயம்புகின் றனமே,
திருநீற்றோடுகூடிய பன்னீர்இலையைப் பிரசாதமாக வழங்கும் திருச்செந்தூர் முருகப்பெருமானையும், அழகான குவளை மலரை ஏந்திய கரத்தினள் ஆகிய தெய்வயானை அம்மையையும், வேலவனுக்குப் புதிய தினைமாவைப் பிசைந்து ஊட்டிய வள்ளிநாயகியையும் போற்றி யாப்பிலக்கணத்தைக் கொஞ்சம் கூறுவாம் என்றவாறு,
இந்நூற்பா தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் கூறலின் இவ்வியலின் தற்சிறப்புப்பாயிரம் ஆயிற்று வாழ்த்தி என்றது நினைத்தல், வணங்கல் ஆகியவற்றிற்கும் உபலட்சணமாயிற்று.
(400)
2.சொல்லின் சார்புஇயல்பு அதனில் சொற்றுள
 வாய்பாட் டசைநிலை உணர்வார் மகிழ்வுற
 முத்தமிழ் யாப்பு மொழிகுதும் முறையே.
இந்நூல் இரண்டாவது பிரிவாகிய, சொல்இலக்கணத்தின் சார்பியல்பில் கூறப்பட்டுள்ள அசை, சீர் இவற்றின் வாய்பாடுகளைக் கற்றுத் தேர்பவர்கள் களிக்குமாறு மூன்று வகையாகப்