பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்263
படை எண்ணுள்ள அடிகளால் நிறைவடைகின்ற பா நேரிசைஆசிரியப்பா ஆகும் என்று கூறலே முறை என்றவாறு,
ஆசிரியப்பாவை இரண்டாகப் பிரிக்க ஐந்து அசைகள் வந்தால் அகவலோசை குன்றும். இதற்குமுந்தைய நூற்பாவின் நான்காவது அடி இரண்டாகப் பிரிக்கப்பட்டால் இவ்வாறு அமையும்;-
பகரிலதன்புணர்ச்சி நிலைமாறுபடலும்
கருவிளந்தண்ணிழற்சீர் புளிமாநறுநிழல்,
இங்கு முதல் பாதியில் சீர்எனும் ஐந்தசைச்சீர் வந்தது. இனி இதையே நான்காகப் பிரித்தால் இவ்வாறு அமையும்,
பகரி லதன்புணர்ச்சி நிலைமாறு படலும்
புளிமா கருவிளங்காய் புளிமாங்காய் புளிமா.
இங்கு இருகாய்ச்சீர்கள் வந்தன. இதனாலேயே இவ்வடி அகவலுக்கு உரிய ஓசையைப் பெறவில்லை. அகவலோசை எனக் கூறுகின்ற இலக்கண நூல் எதுவும் அதனை இலக்கியத்தில் கொண்டு வருகின்ற இந்த நுட்பத்தைக் கூறவில்லை,
மற்ற ஆசிரியர்கள் நிலைமண்டிலம் என வழங்குவதை இவர் நேரிசை என்கிறார், முதலிலிருந்து கடைசிவரை நேராக ஒரே மாதிரி செல்லும் இசையை உடைய பா நேரிசை யாசிரியப்பா எனக்கருதுகிறார், இதைக் காட்டவே இதனை இப் பெயரால் அழைத்தலே பொருத்தமாம் என்று பொருள் தரும்படி “எனல் நெறியே” என்றார்.
இவர் கருத்துப்படி நூற்பாவிற்கும் நேரிசையாசிரியப்பாவிற்கும் உள்ள வேறுபாடுகள் வருமாறு,
நூற்பா
1. எதுகை, மோனைஇன்றியமை யாதன அல்ல, நடுமோனை இருந்தால் சிறப்பு,
நேரிசையாசிரியப்பா
1. எதுகை மோனை இன்றியமையாதன,நடுமோனை ஏற்றது,