பக்கம் எண் :
 
யாப்பிலக்கணம்264
நூற்பா
2. அடி வரையறை இல்லை,
நேரிசையாசிரியப்பா
2. இரட்டைப்படை அடிகளால்தானவரவேண்டும், ஒற்றைப் படைஆகாது.
இவர் கூறும் இந்த இலக்கணத்துக்கு ஒவ்வாத ஆசிரியப்பாக்களை இவரே இயற்றி உள்ளார்.
உதாரணம் 1:-
ஆளாம் அவருள் அகந்தொறும் கருதிய
வண்ணம்நின்று அருளும் மாறில்வான் கருணைப்
பெரியோய் ! நின்திருப் பெய்கழற் பரவும்
தமிய னேன்றனைத் தக்கார் அல்லார்
தாமும் இகழ்வது தவிரமுன் நின்று
விழைவெலாம் உதவி, மெய்ப்புகழ் சூட்டிச்
செங்கதிர் வெண்கதிர்ச் சீரொளி தழைக்கும்
உலகெலாம் உணர உன்னுடன் கலந்துபின்
என்அணி குறிப்பார்க்கு யான்எனத் தோன்றி
அவர்விருப்பு அனைத்தும் அளித்தருள் இனிதே,1
இது எதுகைத்தொடை பெறாத ஆசிரியப்பா,
உதாரணம் 2:-
குருவென உலகில் குலவல் எலாம்நின்
திருவுரு என்னத் தெளிதரப் பெற்றும்
புலைநெறிக் கொடியோர் புன்மை நாடி
மலைவுறும் கொடுமை மாற்றி யருளாய்;
தண்புனற் பணையில் தயங்கும் வாளை
விண்புகின் உரிஞ்சி விரிபூ உதிர்தரு
கொன்பொழில் உடுக்கும் குமார புரியில்
நம்புநர் வேண்டுவன நல்கி
அம்புவி புரக்கும் அயிற்கைவா னவனே.2