பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்369
மாதலின் இவை பிரபந்தத்தின் பாடுபொருளாயின. காவியத்தில் கடவுள், அடியார் வரலாறு விரிவாக இடம்பெறும்.
(524)
126.நூல்களின் பகுதிகட்கு அதிகாரம் என்றும்
 இயல்புஎன்றும் உருவகம் என்றும் பின்னும்
 இசைந்தவா றும்பெயர் இட்டனர் புலவோர்.
அறிவியல் நூல்களின் உட்பிரிவுகளுக்கு அதிகாரம், இயல்பு, உருவகம் எனவும், மேலும் அந்தந்த நூலுக்குப் பொருத்தமாகவும் பெயர் சூட்டினர் என்றவாறு.
அதிகாரம் எனப் பெயர் பெற்றவை தொல்காப்யிம், வீரசோழியம் முதலியன. திருக்குறளின் அதிகாரப் பகுப்பும் இங்கே கொள்ளத்தகும். இயல்பு எனப் பெயர் பெற்றது இந்நூல். உருவகம் எனப்பெயர் பெற்றது சிறப்புநூல்.
வேறுபெயர் பெற்ற நூல்கள்:- நன்னூல், தண்டியலங்காரம்-இயல்; பிரயோக விவேகம், கைவல்ய நவநீதம் - படலம்; திருவருட்பயன்-நிலை; சிவப்பிரகாச விகாசம் - மரபு. வேறும் வந்துழிக்காண்க.
(525)
127.தசாங்கம், பவனி, தூதுஇவை முதலாப்
 பிரபந் தப்பொருள் பிரிவுபல் விதமே.
பிரபந்தப் பனுவல்கள் தம் பாடுபொருளால் தசாங்கம், உலா, தூது முதலியனவாகப் பல்வேறு வகைப்படும் என்றவாறு.
(526)
128.காண்டம் சருக்கம் படலம் கதிமுதல்
 காவியப் பகுதியும் கணக்கரும் பாற்றே.
காவியப் பனுவல்களும் காண்டம், சருக்கம், படலம், கதி முதலிய பல்வேறு பெயர்களிலமைந்த உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும் என்றவாறு.
காண்டம், படலம் இரண்டும் கம்பராமாயணத்தில்; சருக்கம், புராணம் இரண்டும் பெரிய புராணத்தில்; பருவம், சருக்கம் இரண்டும் வில்லி பாரதத்தில்; கதி பிரபுலிங்கலீலையில்.