பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்375
கின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாம் என இக்காலத்தாசிரியர் நூல் செய்தாரும் உளர். அவை ஒருதலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணம் கூறப்படா”1 என்கிறார். அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம்சையின் கருத்தைத் தமிழில், “உவமை என்னும் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கில் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்கும்மே” என மொழிபெயர்த்துள்ளார். மகாகவி பாரதியார், “எல்லா வித அலங்காரங்களும் உவமையணியின் விஸ்தாரங்களைத் தவிர வேறொன்றுமில்லை; ‘உபமாலங்காரமே அலங்காரத்தின் பிராணன்’ என்று பழைய இலக்கணக்காரர் சொல்லுகிறார்கள்”2 எனத் தெளிவாக்கியுள்ளார். இதே கருத்தைத்தான் இவ்வாசிரியரும், “உவமை அதனில் உள்ளபல் விகற்பம் ஒன்றே அணியென உணங்குனர் பலரே”3 என்கிறார்.
இக்கொள்கை பற்றியே அணி இலக்கணமாகிய இதில் உவமை ஒன்றே இடம் பெற்றுள்ளது. இப்பிரிவின் முதல் நூற்பா தற்சிறப்புப்பாயிரம் ஆகும்.
1.கணிஉரு ஆகிய காமர் முருகனைப்
 பணிபவர் அடிமலர் பழிச்சிப் பைந்தமிழ்
 அணிஇலக் கணம்சிறிது அறையலுற் றனமே.
(வள்ளி நாயகியாரால் காவல் செய்யப்பட்ட தினைப்புனத்தில்) வேங்கை மரமாக வடிவம் மாறிநின்ற முருகக் கடவுளை வணங்கும் அன்பர்களின் திருவடித் தாமரைகளைப் போற்றிப் பசுமையான தமிழ் மொழியின் அணி இலக்கணத்தை ஒரு சிறிது கூறலுற்றாம் என்றவாறு.