| 
			
			| |
 | யாப்பிலக்கணத்தை நூற்று முப்பத்து நான்கு நூற்பாக்களால் நிறைவு செய்த நூலாசிரியர் நிறுத்த முறையானே அடுத்த அணியிலக்கணம் உரைக்கத் தொடங்குகிறார். இவ்விலக்கணம் உவகை இயல்பு, உடைமை இயல்பு, கற்பனை இயல்பு, நிகழ்ச்சி இயல்பு, ஆக்க இயல்பு என்னும் ஐந்து உட்பிரிவுகளை உடையது. இவ்விலக்கணம் மொத்தம் நூற்று ஒன்பது நூற்பாக்களால் இயன்றதாகும். |  | தொல்காப்பியத்தில் உவமை ஒன்றே அணியாகக் கொள்ளப்பட்டுப் பொருளதிகாரத்தில் தனி இயலாக இடம் பெற்றுள்ளது. திவாகர நிகண்டு அணிகளைச் சொல்லணி, பொருளணி எனப்பிரித்து முறையே 28,61 என்கிறது!1 வீரசோழியமும் தண்டியலங்காரமும் 35 பொருளணிகளை விளக்குகின்றன. மாறனலங்காரம் 64 அணிகளைக் கூறுகிறது. சந்திராலோகம் விளக்கும் அணிகளின் எண்ணிக்கை 100. குவலயானந்தமோ 120 அணிகள்வரைப் பட்டியலிட்டு விளக்குகிறது. என்றாலும் அணிகள் இத்துணை என்னும் எண்ணிக்கைக்குள் அடங்காது கவிஞனின் ஆற்றலுக்கேற்ற அளவு விரிவடையும் என்பது இந்நூலாசிரியர் கொள்கை. “அணி எனல் புலவோன் அறிவு அளவாமே”2 என இவரே தெளிவாகக் கூறியுள்ளார். இது, “செய்யுள் செய்வார் செய்யும் பொருட்படைப் பகுதி எண்ணிறந்தனவாகலின் அப்பகுதி எல்லாம் கூறாது பொதுவகையான் வரையறைப்படும் இலக்கணமே கூறிஒழிந்தான் என்பது”3 என்னும் பேராசிரியர் கருத்தோடு ஒத்துள்ளமை காண்க. இனி அவரே தம் உரையில், “இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும், சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளும் சொல்லு |  |
 |  |