பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்379
உமாதேவி (பசுமையேயன்றி) மாதுளம்பூப்போன்ற செம்மையையும் பெற்றிருத்தல் உண்டு என்று சிலர் தம் உபாசனையினால் கண்டறிந்து கூறியுள்ளனர் என்றவாறு.
சிவபெருமான் பொதுவாகச் செம்மேனியம்மான் என்றே கூறப்படுவார். சில இடங்களில் பொன்னார் மேனியன் எனவும் வழங்கப்படுவார். திருவாசகம், “நிறங்களோரைந்துடையாய்”1 என்கிறது. உபாசகர்கள் ஒரு குறிப்பிட்ட திருவுருவைத் தியானிக்கும்பொழுது அதற்குரிய நிறத்தோடு தியானிப்பர். இம்முறையில் சிவ வடிவத்தில் ஒன்றான சத்யோஜாத மூர்த்தியின் தியானம் வருமாறு:
குந்தேந்து ஸங்க ஸ்படிகாவ பாஸோ
 வேதாக்ஷமாலா வர தாபயாங்கஹ