பக்கம் எண் :
 
அணியிலக்கணம்380
புகலூர் அக்னீஸ்வரப்பெருமான்மீது திருமேனி வெளுப்பு என ஒரு நூல் பாடியுள்ளார்.1
இவ்வாறே சுப்பிரமணியர் வடிவங்களில் ஞானசக்திதரர் வெண்மைநிறம் உடையவர் என ஸ்ரீதத்துவநிதி கூறுகிறது.2
திருமால் வடிவங்களில் சிம்சுமார மூர்த்தி,3 ஹயக்ரீவ மூர்த்தி,4 ஹம்ஸ மூர்த்தி,5 ததிவாமன மூர்த்தி,6 அஸ்வத்த நாராயண மூர்த்தி7 கோவிந்தமூர்த்தி8 ஆகியன வெண்மை நிறமுடையனவாகத் தியானிக்கப்படும். ஸ்ரீதர வடிவத்தின் தியானஸ்லோகம் வருமாறு:-
ஸ்ரீதர: புண்டரீகாப: சக்ரஸங்க கதாப்ஜப்ருத்