பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்443
நாளதுவரையில் வரலாறின்மையின் அது நீக்கப்பட்டது போலும்.
கணபதியை வழிபட்டு நம்பியாண்டார் நம்பி, ஒளவையார் முதலியோரும், முருக வழிபாட்டால் கச்சியப்ப சிவாசாரியார், அருணகிரிநாதர் முதலியோரும், கலைமகள் கருணையால் கம்பர், ஒட்டக்கூத்தர் முதலியவர்களும், உமையம்மை யாருடைய திருவருளால் காளமேகப்புலவர், அபிராமிபட்டர் முதலியோரும் சிவானுக்ரஹத்தால் நால்வர், சேக்கிழார் முதலியவர்களும் திருமால் பக்தியால் ஆழ்வார்கள், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரும் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமை பெற்றதை அன்னோர் வரலாறுகளால் அறியலாம்.
(650)
9.நூற்பகை கொள்ளினும் நுண்ணிய புலமைச்
 சீரியர் தம்பகை சிறிதும் காதே.
(அரிய நூல்களை ஐயந்திரிபற முழுமையாகக் கற்று உணர்ந்துகொள்ளும் ஆற்றல் தம்பால் இன்மையால் அத்தகைய) நூல்கள் எளிதிற் புரியாதவை, அளவால் பெரியவை எனக்கருதி அவற்றை வெறுத்தாலும், நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்களை வெறுக்கும் பண்பு தமிழ்ப்புலமை வேட்கை உடையவர்க்குக் கொஞ்சமும் கூடாது என்றவாறு.
இங்கு பகை என்றது வெறுப்பை, வெறுப்பின் அடிப்படைக் காரணம் உரையில் பெய்து கூறப்பட்டது. பவணந்தியார் நூற்பகைவனை, “தொன்னூற்கு அஞ்சித் தடுமாறு உளத்தன்” என்பார். கொள்ளினும் என்ற உம்மையான்1 “நூற்பகை கொள்ளற்க” என்றே விலக்கப்பட்டது. அறிஞர்கள்பால் விருப்பம்இருப்பின் அவர் துணையால் அரிய நூற்கருத்துகளைச் சிறிதுசிறிதாகவேனும் அறிந்து நாளடைவில் முழுப்புலமை பெற வாய்ப்புண்டு. மெய்ப்புலவர்களின் தொடர்பு இல்லாவிட்டால் செல்வத்துட் செல்வமும், ஒற்கத்துக்கு ஊற்றாம் துணையும் ஆகிய கேள்வியும் தடைபட்டுவிடுமாதலின் அறிவு வேட்கையர்க்குப் புலவர் பகை சற்றும் ஆகாது என