பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்444
வலியுறுத்தப்பட்டது. “வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க; சொல்லேர் உழவர் பகை”1 என்ற தமிழ்மறை ஈண்டு ஓரளவு ஒப்புநோக்கற்பாலது.
(651)
10.சோம்பலும், துயிலும், சுரிகுழல் மடவார்
 மோகமும், கலியும் முன்வந்து அடுப்பினும்
 அஞ்சார் செந்தமிழ் ஆணிப் பொன்னே.
மடி, பேருறக்கம், பெண்ணாசை, வறுமை ஆகிய கல்விப் பகைகள் மிகுந்து இடர்செய்தாலும் அவற்றாற் சோர்வடையாமல் ஊக்கத்தோடு கல்வியில் கவனம் செலுத்தும் மாணவர் தமிழ்க்கல்விக்கு மாசற்ற தங்கத்தைப் போன்றவர்கள் ஆவர் என்றவாறு.
“களி, மடி, மானி, காமி, கள்வன், பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன், துயில்வோன், மந்தன், தொல்நூற்கு அஞ்சித்தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி, படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே”2 என்றார் நன்னூலார். இவருள் நூற்பகை கொள்வோரை முன் நூற்பாவில் கூறிய இவர் இதில் மடி, காமி, ஏழை, துயில்வோன் ஆகிய நால்வரைக் கூறினார். பவணந்தியார் இவர் ஐவரும் மாணாக்கராகத் தகாதவர்கள் என முற்றிலும் ஒதுக்க, இவர் நூற்பகைனையக் கேள்வியாலும் சோம்பல், துயில், காமம், வறுமை ஆகியவற்றை விடாமுயற்சியாலும் வெல்ல வல்லவர் உளரேல் அவர்களும் புலமை பெறத் தக்கவரே எனத் தழீஇக் கொண்டார். அவ்வாறு கொள்ளவே கட்குடியன், அகந்தை உடையவன், திருடன், நீங்காத நோய் உள்ளவன், விதண்டாவாதம் செய்பவன், முன்கோபி இயல்பாகவே அறிவுக் கூர்மை இல்லாதவன், அஞ்சுவதற்கு அஞ்சாதவன், தீவினையாளன், வஞ்சகன் போன்றவர்கள் மாணாக்கராதற்குச் சிறந்தவர் அல்லர் என்க. இந் நூல் நன்னூலுக்கு நேரான வழிநூல் ஆகாமையின் இவ்வாறு கொள்ளலாமோ எனின் அடிப்பட்ட ஆன்றோர் மரபிற்கு முரணாதாயின் கொள்ளலாம் என்க. “கையறி யாமை