வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை. தீவினையச்சம் என்பன போலத் தள்ளத் தக்கனவற்றையும் தனித் தனியே விரித்துரைத்தார். |
புலவர்கள்பால் தற்பெருமை, புலமைக்காய்ச்சல் என்னும் பொறாமை போன்ற சில தீய பண்புகள் இயல்பாகவே இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை சரியகாவோ தவறாகவோ சமுதாயத்திலே நிலவி வருகிறது. இவைகள் புலவர்களிடத்தில் இருக்க வேண்டியனவும் அன்று; நீக்க முடியாதனவும் அன்று என்பதற்காகப் பேரா நலம்எனப் பிணங்க ஒண்ணாது என்கிறார். பேரா - பெயர்க்கமுடியாத, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். |
36. | “நவின்றும் அங்ஙனம் நடக்கக் காணாப் | | புலமைத் தன்மையும் பொருவில் மெய்யருள் | | ஆம்” எனக் கருதும் அஃதும்ஓர் பிழையே. |
|
“ஒரு கவிஞனிடம் வாக்குப்பலிதம் இல்லாவிடினும் அவனிடமுள்ள கல்வி மற்றும் மொழிப்புலமையே இணையற்ற இறையருள் ஆகும்” என எண்ணுதல் தவறாகும் என்றவாறு. |
முன் இயல்பில், “நூலின் துணையினும் நூறுபங்கு அதிகம் தெய்வத் துணைஆம் செழுந்தமிழ்க் கவிக்கே”1 எனவும், “கால மழைஎனப் புதுக்கவி கழறலும், சொற்படி நடக்கக் காண்டலும், பிறவும் தெய்வத் தன்மைப் புலமை யாமே”2 எனவும், ஏழாமிலக்கணத்தில், “யாப்பியல்பு உணரினும் எடுத்த வண்ணம் பாடுமாறு அருள்வது பாரதி கடனே”3 எனவும் கூறிய இவர் கூற்றுகளுக்கே இது முரணாகாதோ எனின் ஆகாது. |
மொழியறிவின் முடிந்த முடிபு-அதாவது கற்றதனாலாய பயன் - வாலறிவன் நற்றாளடைவதே. இதை இவர் தெள்ளத் |
|