பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்465
தெளிவாக, “புலமைத் தொழிலாற் பொருந்தும் மெய்ப்பயன் மலம்அறக் களையும் மாதவ நிலையே”1 எனக் கூறுவார். எனவே, புலமை குறிக்கோளை அடைவதற்குரிய ஒருகருவியே; அதுவே குறிக்கோளன்று. (சாதனமே; இலட்சியம் அன்று.) இச் சாதனம் இறையருளால்தான் கிடைக்கிறது என்பது உண்மைதான் ஆனால், சாதனத்தைப் பெற்றதாலேயே இலட்சியத்தை அடைந்து விட்டதாகக் கூறமுடியுமா? “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி”2 என்றார் மணிவாசகர். இறைவன் தாளை வணங்குவதற்கே இறையருள் வேண்டும். அவ்வருள் பெற்று அவனை வணங்கிப் பிறகு வீடடைய வேண்டும். முதலில் குறிக்கப்பட்ட அருள் இலட்சியத்திற்கு உதவிபுரியும் சாதனத்தை வழங்கும் அருள்; கருவி கைகூடிய அளவிலே குறிக்கோளை எட்டிவிட்டதாகக் கூறக் கூடாது. இலட்சியம் பிறகுதான் நிறைவேறும். அதேபோல இவரால் பிற இடங்களில் குறிக்கப்பெற்ற தெய்வத்தன்மை, தெய்வத்துணை பாரதிகடன் போன்றவை கருவியாகிய புலமையை வழங்குகின்ற தெய்வானுக்கிரகம் பற்றியது. இக்கருத்து ஆன்மா உணர்விக்க உணரும் தன்மையுள்ள சதசித்துப் பொருள் என்னும் சாத்திரத்தின் அடிப்படையில் அமைந்தது.
இவ்வியல்பிலுள்ள இந்நூற்பா குறிப்பிடுவது சாதனத்தைத் தருவதாகிய இடைநிலை அருளை அன்று; தன் முழுக் கருணையையும் காட்டி ஆண்டுகொள்ளும் பேரருளை. எனவே தாம் பொருஇல் அருள், மெய் அருள் என இரண்டு அடைகள் புணர்த்தார். இறையருள்விலாசம் ஒரு சிறிதுபெற்ற உடனே முழுத்திருப்தி பெற்று நாம் குறிக்கோளை எட்டிவிட்டோம் என எண்ணி ஏமாந்துவிடக் கூடாது என்பது கருத்து. இந்நூலாசிரியர் புலமையையும், சமயத்தையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் பார்ப்பவர். இவர் தம் கௌமார முறைமை என்னும் சாத்திர நூலில், “தொட்டஉபா சனைநலத்தது ஆகில் கல்வித் தோற்றம்உண்டாய்ப் பலபல்கவி சொலும்சீர் எய்தி அட்டதிக்கில் தெய்வங்கள் பலவும் ஒன்று என்று அறிகின்ற பேரறிவும் அமையும்; அப்பால் இட்டம்உற்ற