காலத்தில் நடவு முடிந்திருந்த சில வயல்களின் அளவில் மழை பொழியுமாறும் பாபநாசம் உலகம்மையின் அருள்பெற்ற நமசிவாயப்புலவர் தமிழ்க்கவி பாடிச்சிறந்திருந்தார் என்றவாறு, |
புலவர் புராணம் நமசிவாயப்புலவர் சருக்கத்தில் இந்நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன, (743) |
102. | தூக்கிய மாலையைத் துண்டு துண்டு ஆக | | வாக்கினால் தறித்தோன் ஆதிய புலவோர் | | புகழ்எலாம் அறிந்த மட்டில் புகலினும் | | அஃதோர் காவியம் ஆகும் அன்றே. |
|
தொங்கவிடப்பட்ட மலர்மாலையைத் தன் கவிதையால் பல துண்டுகளாக அற்றுவிழும்படி செய்த கவிஞன் முதலாகப் பற்பல தமிழ்க் கவிஞர்களின் பெருமைகளை எல்லாம் நான் அறிந்த அளவில் கூறினாலும் அது ஒரு பெரிய காவியம் ஆகி விடும் என்றவாறு, |
பூமாலையைத் தறித்த புலவர் யார் என்பது விளக்கமாக விளங்கவில்லை. புலவர் புராணத்தில், “வாக்கு இயலும் ஒரு குருட்டுக் கிழவன் ஓர்ஊர்ச் சிவகாமவல்லி வாயில் தூக்கிய மாலையைக் கவியால் துண்டுதுண்டா விழத்தறித்துச் சொலிச் செய்வித்தோன் நோக்கிஅடி பணிந்துஇறைஞ்சி அரசு உதவும் இறுமாப்பும் நூறி வேண்டும் பாக்கியங்கள் இடப்பெற்றான் ஆதலினால் அருள்போலும் பயன்ஒன்றுஇன்றே”1 என்னும் ஒரு குறிப்புமட்டும் இடம்பெற்றுள்ளது., பிற செய்திகள் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை, |
தமிழ்க் கவிஞர்களின் புகழ் எல்லாவற்றையும் முற்றுத் தேடித் தொகுத்துச் சொல்வது ஒருபுறமிருக்க, எனக்குத் தெரிந்தஅளவு கூறினாலே ஒரு காவியம் ஆகிவிடும் என்பார், ‘அறிந்தமட்டில் புகலினும் என்றார். இவ்வாறு இவர் இயற்றிய காவியமே விருத்தங்களாலான “புலவர் புராணம்” என்னும் நூல். இத்ததைகயஒரு நூலைப் படை்க்க வேண்டும் என்ற விழைவு |
|