அவர் உள்ளத்தில் நீண்ட நாட்களாகவே இருந்தது என்பதும், பல ஆண்டுகளுக்குப் பிறகே அவ்வெண்ணம் முற்றுப்பெற்றது என்பதும் அந்நூலில், “நூற்பெயர்யாது எனில் உண்மைப் புலவர் புராணம் அது ஆம்; நுவலும் இடம் திருநெல்லைநகர்”1 எனச் சிறப்புப் பாயிரம் கூறப் பிறிதோர் இடத்தில், “நெல்லையினில் துவக்கும்இது நெடுநாள்என் மனக்கருவில் நின்று என்றும் எல்லைஇல்பா மாலையினம் பிறந்தததற்பின் மாதைநகரிடத்துஇந் நாளில் குல்லைமலர்க் குகன்கடவ நடைதரும்” என்பதாலும் அறியமுடிகிறது. அறுவகை இலக்கணம் பாடிய பிறகே இவர் புலவர் புராணத்தைப் பாடத் தொடங்கினார்2 (காண்க.,புலவர் புராணம், பொதுப் பாயிரம் 10) எனவே இம்மரபியல்பே அவருக்கு இத்தகைய ஒரு காவியத்தை நாமே பாடவேண்டும் என்ற உணர்ச்சியை ஊட்டியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பெரியபுராணத்திற்குத் திருத்தொண்டத் தொகை போன்று இப்பகுதி புலவர் புராணத்திற்கு அடிப்படையாகிறது எனலாம். (744) | 103. | புலமையை இழிவுஎனப் புகல்வார் புந்தி | | நாணுறும் பொருட்டும், நண்ணுவார் நெஞ்சம் | | களித்துக் காரியம் கைக்கொள முயலும் | | பொருட்டும் மரபியல் இவ்வணம் புகன்றுஇனிச் | | செயல்வகை இயல்பினைச் செப்புதுந் தெளிந்தே. |
| தமிழ்ப் புலமை நடைமுறை வாழ்விற்குப் பயன்படாத ஒன்று எனக் கூறுவார் வெட்கமடைந்து அவ்வாறு கூறுதலை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவும், அப் புலமையை விரும்புபவர்கள் மனஊக்கங்கொண்டு அத்துறையில் வெற்றி பெறுவதற்குரிய பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுவதற்காகவும் தமிழ்ப் புலமையால் பண்டைய புலவர்கள் செய்த செயற்கரிய செயல்களைத் தொகுத்துக்கூறிய “மரபியல்பு” என்னும் இப்பகுதியை இத்துடன் நிறைவு செய்து அடுத்ததாகச் செயல்வகை இயல்பு என்னும் பகுதியைத் தொடங்குவோம் என்றவாறு, | |
|
|