பார்க்க முடியாததாலும் அறிவார் சிலரே என்றார். இதன் அருமை இவர் கொண்ட உவமையாலும் விளங்குகிறது. ஆதிசேடன் ஒருவன்தான், பாம்புகள் பலவாகும், பல அரவுகள் இருந்தால்தான் ஒருவன் அரவரசனாகத் திகழமுடியும் பாம்புவமை அடுத்த நூற்பாவிலும் தொடர்கிறது. (752) |
111, | அந்நாட் புலவருக்கு ஆகிய பெரும்பேறு | | இந்நாட் புலவர்க்கு இலைஎனும் கவிஞன் | | பாம்புஉறழ் தோற்றம் படைத்துள மீனே, |
|
“முற்காலக் கவிஞர்களுக்கு இயல்பாகவே மிகுதியான நல்லூழ் இருந்தது. அத்தகைய அதிர்ஷ்டம் இன்றைய புலவர்களுக்கு இல்லை., எனவே இக்காலத்தில் எம்போன்றவர்கள் செயற்கரியனவற்றைச் செய்ய இயலாது” என்று படித்தவன் ஒருவன் கூறுவானாகில் அவன் பார்வைக்கு மட்டிலும் பாம்பைப் போலக் காட்சிதரும் ஒரு மீன்போன்றவனே ஆவான் என்றவாறு, |
பாம்பைப்போல் காட்சிதரும் மீனுக்கு எவ்வாறு கொத்தும் ஆற்றலும் அதனால் பிறருக்கு அச்சம் விளைவிக்கும் பண்பும் இல்லையோ அவ்வாறே இத்தகையோர்பாலும் பிறர்நெஞ்சில் பயத்தோடு கூடிய மதிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமை இராது என்பது கருத்து. பாம்புறழ் மீனே என்றதால் போலிப்புலவன் என்க. |
சிலர் “கலி முற்றிவிட்டது., இப்போது அறம் இல்லை. சத்தியம் இல்லை. எனவே திருவருட்செயல்கள் எதுவுமே நடைபெறா” என்பர். அப்படியானால் இறைவனின் திருவருள் குறைந்துவிட்டதா? பரம்பொருள் பழமையாகிப் போய்த் தன் ஆற்றலை இழந்துவிட்டதா? கலியின் ஆற்றல் இறைவனின் ஆற்றலுக்கு மேற்பட்டதா? என்றெல்லாம் வினாக்கள் தோன்றும். இக்கூற்று சாத்திரங்கள் பரம்பொருளுக்குக் கூறும் இலக்கணத்தையே பொய்யாக்கிவிடும்,. எனவே இவ்வாறு காலம், இடம் என்று சமாதானங்களைத் தேடிக்கொண்டிராமல் இறையருளைத் திண்மையான பற்றாகப் பற்றி முயலவேண்டும் என்பது கருத்து, “கலிபுருடன் வயது ஒருநூறுஆய போதும் |