பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்514
110,புலமையின் ஆண்மையும் புகழ்ச்சியும் கருதிப்
 பெறலே பயன்எனப் பெரிதுநெஞ்சு அயர்வோன்
 பரிதிமுன் ஆடு பாம்புக் குருளை
 அனையவன் தான்என்று அறிவார் சிலரே,
தான் கற்ற கல்விக்குக் கல்வி, செல்வம் இவற்றால் உண்டாகும் பெருமிதமும், பலராலும் பாராட்டப்படும் சிறப்புமே பயன்கள் எனவும், அதனால் அவற்றை எப்படியாவது பாடு பட்டுப் பெறவேண்டும் எனவும் கருதி வருந்தி உழைப்பவன் சூரியனுக்கு முன்னால் நெளிந்து ஆடுகின்ற பாம்புக்குட்டி போன்றனே ஆவான், ஆனால் இந்த உண்மையை அறிந்தவர் மிகச்சிலரே ஆவர் என்றவாறு,
ஆண்மையும் புகழ்ச்சியும் கருதிப்பெறலே புலமையின் பயன் எனக்கொண்டு கூட்டுக. அன்றிப் புலமையினால் என மூன்றன் உருமை விரித்துரைப்பினும் அமையும். ஆண்மை என்றது கல்வியாற் பதவியும் பொருளும் பெற்று அடையும் பெருமிதத்தை.
கல்வியாற் பெறும் பயன்கள் இவையே என எண்ணி முயல்பவன் வெய்யில் தாங்காமல் நெளியும் பாம்புக் குட்டியைப் போன்றவன் என்கிறார். பாம்பு எத்தகையதாயிருப்பினும் காண்போருக்கு அச்சத்தை விளைவிக்கும். அவ்வாறு இப்புலவனும் பிறர் உள்ளத்தில் மதிப்பை உண்டாக்குவான், ஆனால் அந்த அச்சம் ஏதாவது ஒரு வகையில் நீங்குவது போலவே இவன் பெறும் மதிப்பும் நீங்கிவிட வாய்ப்புண்டு, எனவே இப்பயன்கள் போதா என்கிறார்.
முன் நூற்பாவில் செயற்கரிய செயல்களைத் தம் வாக்கு வன்மையால் செய்து காட்டுகிறவர்கள் ஆயிரம் நாவுடையவனும், இவ்வுலகத்தையே தாங்குபவனும், பெரும் பேரறிவு வாய்ந்தவனுமாகிய ஆதிசேடனுக்கு இணை என்றுகூறி இந்நூற்பாவில் அவ்வாற்றல் இல்லாதவன் ஒரு சாதாரணப் பாம்பு போன்றவன் என்கிறார், இலக்கண இலக்கிய நூலாசிரியர்களில் பலர் இக்கருத்தைக் கூறாததாலும், கற்றவர்கள் அனைவரும் அருஞ்செயல்களை நிகழ்த்திக் காட்டவேண்டுமென எதிர்