| தந்தத்தனத்ததன தனனதன தத்ததன,.,,, தனதானனா |
| அன்பர்க்குமுத்திதரு பரசிவனை ஒத்துஇலகு |
| தென்றற்பொருப்பில்உறை தமிழ்முனி வளர்த்தருளும் |
| அன்றுஎட்டுவித்தைவரும் ஒருவலிய சித்தனைவெல் வழிவீறுதோய் |
| அந்தப்படிப்பில்உயர் ஞமலிவிதி யிற்பழகு |
| பின்பற்றுஎழிற்பிறவி எழுவகை கழித்துநவில் |
| அந்தத்தில்விட்டகுறை முடிவுற உதித்தபழ முறைவாய்மையான் |
| முன்பக்குவப்புலவர் மகிழ்வொடு வியப்பஅறிவு |
| இன்றிச்சிவத்தைமுனம் இகழ்பறி தலைச்சமணர் |
| மொய்ம்பைத்துதிக்குநர்சொல் இகல்கெடஎழுத்து உருவம் முதல்ஈறதுஆம் |
| முந்துற்றமெய்ப்புலமை இயல்பொடு சிறப்புஅளவை |
| துன்றக்குறித்துஉணர்சண் முகன் அருள்விளக்கம்உற |
| முந்தைக்கருத்துஇசையும் அறுவகை இலக்கணநல் விதிகூறினான்; |
| இன்பத்தமிழ்க்கடலும் இணையில்கரு ணைக்கடலும் |
| ஒன்றுஎத்தகைப்புகழும் ஒருவடிவு என்பபொருவில் |
| எண்சித்திற்முற்குலவு நிலைபெறு கதிக்குஉரிய தவவாழ்வினான் |