பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்549
இந்தத்தரைக்குள்அடர் பரமதர் செருக்குஅறவி
   ளங்குஅற்புதச்சமய நெறிகள்நிலை நிற்கமுயல்
   என்சற்குருக்கள்சம ரசவிரத முத்தன்வழி
படுபான்மைசேர்
 தன்பத்தர்வெற்றிபெற நயமுதரி தப்பணிகொள்
   சந்தத்திருப்புகழொடு அளவில்பனு வற்றொகுதி
   சந்திக்கும்எப்பதிகள் தொறும்மழை எனப்பொழியும்
நிறைபோதன்மா
 சண்பைப்பதிக்கண்வரு தவன்என மதித்துஅறிஞர்
   கும்பிட்டுஉயத்திகிரி வளையவர் கரத்தில் அணி
   தண்டத்திருப்பொலிவி னொடுகழை வனப்பதியில்
வருநாதனே.
மகாவித்துவான் வேங்கடசுப்புப்பிள்ளை சோதரர்அரன்வாயல் தங்கவேற்பிள்ளை அவர்கள் இயற்றியது
வேள்துதிஇராப் பகல்பழிச்சும் தமிழ்ப்புலவர்க்கு
    இருகண்மணி விளக்கம் போலக்
 கூடுதிருஆம் இலக்கியம்நல் இலக்கணம்; ஆங்கு
   இலக்கணநூற் கூறுஐந்து இங்ஙன்
 ஈடுதிர்1ஆ வியைப்புரையும் புலமையும்சேர்த்து
   ஆறுவகை இலக் ணத்தைப்
 பாடுதிரா விடம்2 சிறப்பத் தவமுருக
   தாசமுனி பகர்ந்தது அம்மா.
அஷ்டாவதானம் பூவை, கல்யாணசுந்தரமுதலியார்மாணாக்கர் வல்லை. சண்முகசுந்தர முதலியார் அவர்கள் இயற்றியது.
உயிர்வரின்உக் குறள்மெய்விட்டு ஓடுதல்போல்
   உலகஇலக் கணங்கள் ஓட
 பயிர்களதுஊ தியம்கருதாது உயஅருளும்
   கனமழைபோல் பரிந்து மண்மேல்