| ஓங்குபுகழ் அருணகிரி நாதர்அவ தாரமாய் |
| உலகுஅதனில் வந்துஉதித்தே |
| ஒருகோடி சந்தம்ஆ னாலும்ஒரு நொடியினில்உ - |
| ரைத்துஅருளும் மாட்சிமேவிப் |
| பாங்குபெரு சீவகா ருணியம்எங் கணும்உறப் |
| பகர்சித்தி நோன்புஉஞற்றிப் |
| பயில்தண்ட பாணிமுனி வரன்ஆகும் ஞானமணி |
| பலநயமும் இலகஓதும் |
| சாங்கம்உறும் அறுவகையொடு ஏழாமி லக்கணம் |
| சார்ந்துஒளிர் சிறப்பைஓர்ந்தே |
| தமிழ்வலார் யாவரும் வியந்துரைத் திடல்மகிமை |
| தான்எனம திக்கவேண்டாம் |
| வாங்கரிய எட்டாவ தோடுஒன்ப தாம்அவைவ- |
| குத்துஇனிது உரைக்கும்வண்ணம் |
| வருங்காலம் ஒன்றுளது சேடன்அநு மன்பரிதி |
| வாணிமுத லோர்மெச்சவே |