பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்557
   தனனதன தத்தன தனனதானா
திருவடிக ளைத்தினம் மனதினூடே
  திடமுறநி னைத்திடு தவம்உளோர்பால்
 வருகுருப ரத்தனி முதல்வன்மீதே
  வலியதமி ழைப்புனை புலமையோரே
 கருணையொடு சற்குணம் மருவுசால்போர்
  கருதுவரம் முற்றிலும் உதவுசீர்சேர்
 அருண்மலிதி ருப்புகழ் முனிவன்ஓதுஓர்
  அறுவகைஇ லக்கணம் இனியதாமே.
புராணப்பிரசங்கம் நெல்லை அங்கப்பமுதலியார் அவர்கள் இயற்றியது.
சுந்தரம் பெருகுமுத் தமிழ்வலோர் உவகையில்
    தோய்ந்துஅளவில் சுகிர்தம்உறவும்
  சொல்லரிய மறையைநெறி முறைஓதும் வேதியர்கள்
    சுபசோப னம்சொல்லவும்
 அந்தரத் தோர்வியப்பு உறவும்மகு டாதிபர்உள்
    அன்புடன் போற்றிசெயவும்
  அறுவகைஇ லக்கணப் பனுவல்ஒன்று அன்பருக்கு
    அருமருந்து எனஉதவினான்
 கந்தரம் தவழ்சோலை நெல்லைமா நகரினன்
    கருணையே வடிவம்ஆனோன்
  கவிவாணர் நெஞ்சம்தி டுக்கிடச் சந்தங்கள்
    கழறிடுங் கரடகொம்பன்
 இந்திரன் துயர்கெடச் சூர்வென்ற கந்தவேள்
    இணையடிவி ரும்பும்இயல்போன்
  இணையிலா அநுபூதி உறுமுருக தாசன்என்று
    இலகும்எம் குருநாதனே.