பக்கம் எண் :
 
சாத்துகவிகள்556
சுந்தரச் சைவசமை யப்புனிதர் ஆதிநல்
      தூயர்க்கும் மற்றுஎவர்க்கும்
 சுகஞான அமுதம்என அறுவகைஇ லக்கணச்
       சூத்திரம்உ ரைத்துஅருளினான்;
 பந்தபா சம்சிறிதும் மருவாது திருவருட்
       பத்தியில்உ யர்ந்தசீலன்
 பகரரிய சித்திமுத் திகள்உதவும் மாதவப்
       பணியிற்சி றந்தமேலோன்
 செந்தமிழ்க் குறுமுனிவர் வாழ்பொதியை தனில்எழுஞ்
       செம்பொருநை நதியின்மேவும்
 செழுமலர்ச் சோலைசூழ் திருநெல்லை நகரினில்
       திகழ்முருக தாசன்மாதோ.
 சிவனணைந்தபெருமாள் முதலியார் அவர்கள் இயற்றியன
நேரிசை வெண்பா
கற்றோர்க்குத் தெள்ளமுதம் கற்போர்க்குக்கோடிவிழி
 மற்றோர் மருள்கெடுக்கும் மாமருந்து - கொற்ற
 முருகதா சக்குரவன் மூதறிவாற் சொன்ன
 இருமூன்று இலக்கணநூ லே.
வேதமுத லாயபல நூல்களும்இ யம்பும்ஒரு
       மெய்ப்பொருளை நாடும்அன்பர்
    வேண்டுசெந் தமிழிலக் கணம்ஓர்ஐந்து எனவேவி-
       ளங்கலால் யாவருக்கும்
 மாதவப் பேறுதந் திடுபுலமை யுடன்ஆறு
       வகையிலக் கணம்உரைத்து
     மலர்வாணி அனையபல கவிவாணர் துதிசெய்உரு
       மலைமீதுஅ ரங்கேற்றினான்
 தாதுஅவிழ்கடம்பினைச் சேவலங் கொடியினைத்
       தனிவேலை மயிலைநிதமும்
    சந்தம்ஆ தியபனுவ லாற்புகழ் வல்லவன்
       சமரசநி றைந்தஞான
 சாதகர்வ ணங்குதிரு நெல்லைநகர் தனில்முருக
       தாசன்என வந்துஉதித்தோன்
     சங்கரே சற்குஇனிய கந்தவே ளைப்பரவு
       தண்டபா ணிக்குரவனே.