பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்555
திருநெல்வேல் ஒளிமுத்துத்தொண்டமான் குமாரர் அருணாசலத்தொண்டமான் இயற்றின.
வெண்பா
செய்ய தமிழால் சிறந்தபா மாலைசெய்யும்
 மெய்யடியார்க்கு எந்நாளும் வேண்டுதுணை - உய்யஅருட்
 பேறு கருதிப் பெறும்முருக தாசன்அருள்
 ஆறு வகையிலக்க ணம்.
சுந்தரநி றைந்திலகு சண்முகக் கடவுளே
    தூயபரம் எனஉரைத்தும்
    சுருதிகட்கு உரியசட் சமயங்க ளிற்பெருகு
     தொண்டருக் கினியதுஆன
 செந்தமிழ்இ லக்கணம்ஓர் ஐந்தும்அவை தரலான
    திருவருட் புலமையொன்றும்
    திகழாறு வகையிலக் கணம்எனவு ரைத்தன்பர்
     சிந்தைமகிழ் வுறஉதவினான்
 சந்தமொரு கோடியா னாலும்தொ டுக்கச்ச-
    லிப்புறாக் கவிஞர்வேந்தன்
    சகலஉயிர் களின்மீதும் நீங்காத கருணைமிகு
     தன்மைபெறு தண்டபாணி*
திருநெல்வேலி அருணாசல முதலியார் அவர்கள் இயற்றியவை
நேரிசை வெண்பா
வேதத்தின் உட்பொருளும் மெய்ஞ்ஞான மும்பெறலாம்
 கோதற்ற செந்தமிழ்ப்பாக் கூறலாம்-போதம்
 பெறுமுருக தாசப் பிரான்அருளிச் செய்த
 அறுவகைஇ லக்கணநூ லால்.
சந்தமுத லாயபா மாலிகைதொ டுத்திடத்
      தக்ககவி வாணருக்கும்
   தன்மைகுடி கொண்டமெய் அடியவர்கள் பாதமே
      தஞ்சம்என வாழ்பவர்க்கும்