| கந்தசாமியைச்சிறு மைந்தன்என்று அவுணர்கூடிக் |
| கடியநண்ணியதுபோல நண்ணலாமோ நல்லது |
| அந்தநாளிலே ராமச்சந்திரனை மனிதன்என்று |
| அரக்கன்எண்ணியதுபோல் எண்ணலாமோ யாரும் |
| வந்தனைசெயும் ஞானசம்பந்தனைச் சமணர்எல்லாம் |
| வாதுபண்ணியதுபோல் பண்ணலாமோ நாமும் |
| இந்தமாதவனைக்கண்டு சிந்தைமகிழாமல்அமுது |
| இருக்கவிஷத்தைவாரி உண்ணலாமோ யார்க்கும் |
| முந்தவேயருள் கும்பமாமுனி வாக்யமே போலும் |
| எந்தையாய்இவன் விண்டநூல்வெகு சிலாக்யமேஆகும் |
| புந்தியால்இது அறிந்தபேர்பெரும் யோக்யமே வெகு |
| அந்தமாக விளங்கும்ஈதுஅதி பாக்யமே அன்பால் |
| ஆயரக்கவி யாவதுஇட்சண மேஉரைப்பவர் யாவர் இப்படி) |
| நேயம்வைத்திடும்ஈதுஅருட்செயலாயிருப்பதினாலுநிச்சயம் (அருண) |