| தொல்லைவினையோ அல்லது என்னதவமோ தொண்டர் |
| | தொழுநெல்லை நகர்வந்து பிறந்தானே பிறந்து |
| | அல்லல்உலகவாழ்க்கை எள்ளளவும் ஆகாதுஎன்று |
| | அறிவாலேசுகர்போலும் துறந்தானே துறந்து |
| | எல்லையில்லாக்கவிகள் சொல்லியே அறுவகை |
| | இலக்கணமும்செய்து சிறந்தானே இது |
| | அல்லாமல்திருப்புகழ் சொன்னது அனந்தம்சைவ |
| | ஆகமப்பயிர்கட்குஈது அறம்தானே நிந்தை |
| | சொல்லிவாழ்கிற புல்லருக்குஇடர் நீட்சியே அன்றி |
| | நல்லஉத்தம வல்லவர்க்குஉயர் காட்சியே ஆகும் |
| | வெல்லும்வேள்புகழ் சொல்லிவாழ்கிற மாட்சியே பெற்றுச் |
| | செல்வரைப்புகழாத சீர்ஒரு சாட்சியே நாளும் |
| | சீதமானகுணாலமாதவன் வாதமேசெயும் வாணர்நேர்வரின் |
| | நீதியாய்விதிபேசிவாது அறம் ஓதுவான்நிசம் ஆகையால் இவன் (அருண) |