|
[குறள் வெண்பா]
‘கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.’1
இது முதல் நின்ற சீரின் இறுதி எழுத்து அளபெடுத்து ஒன்றிவரத் தொடுத்
தமையால், இறுதி நிலை அளபெடைத் தொடை.
[குறள் வெண்பா]
‘உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ
விராஅய கோதை விளர்ப்பு?’
இது முதல் நின்ற சீரின் நடுநின்ற எழுத்து அளபெடுத்து ஒன்றிவரத் தொடுத்
தமையால், இடைநிலை அளபெடைத் தொடை.
இனி, ஒற்றளபெடை:
[குறள் வெண்பா]
‘வண்ண்டு வாழும் மலர்நெடுங் கூந்தலாள்
பண்ண்டை நீர்மை பரிது.’ 1
இஃது இடைநிலை ஒற்றளபெடைத் தொடை.
[குறள் வெண்பா]
‘உரன்ன் அமைந்த உணர்வினா ராயின்
அரண்ண் அவர்திறத் தில்.’
இஃது இறுதிநிலை ஒற்றளபெடைத் தொடை.
‘தொடையே’ என அதிகாரம் வர வைத்து பெயர்த்தும்
‘அளபெடைத் தொடையே’ என்றதனால், முதல் எழுத்து ஒன்றி வந்து
அளபெழுந்தால் ‘மோனை அளபெடைத் தொடை’ என்றும், இரண்டாம்
எழுத்து ஒன்றி வந்து அளபெழுந்தால் ‘எதுகை அளபெடைத்தொடை’
என்றும் முரணாய் வந்து அளபெழுந்தால் ‘முரண் அளபெடைத் தொடை’
என்றும், அவை பலவாய் வந்து அளபெழுந்தால் ‘மயக்கு அளபெடைத்
தொடை’ என்றும், பிற வாராது அளபெழுந்
குறள். 1087. பி - ம். 1பரிது.
|