|
உறுப்பியல் - தொடை ஓத்து 177 |
தால் ‘செவ்வளபெடைத் தொடை’ என்றும் வழங்கப்படும். அவற்றிற்குச்
செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க.
‘அஃதே எனின், ‘அளபெடை ஒன்றுவது அளபெடைத் தொடை
என்னாது, ‘அளபெடைத் தொடையே’ என்று ஏகாரம் மிகுத்துச் சொல்ல
வேண்டியது என்னை? எனின், ‘ஒருசார் ஆசிரியரால் இணை முதலாகிய
ஒருசார் அளபெடை விகற்பங்கள் சிறுபான்மை ஒன்றாது அளபெடுத்து
வரினும், கொள்ளப்படும்,’ என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.
தொடை விகற்பத்து நான்கு உயிரளபெடையும், இரண்டு ஒற்றள
பெடையும் தம்முள் மயங்கி வரப்பெறும்:
உதாரணம் :
‘ஏஎ ராஅர் நீஇ ணீஇர்.’
என்பது கொள்க.
இனி, அவை எட்டு வகையானும் வழங்குமாறு:
[பஃறொடை வெண்பா]
‘ஆஅ அளிய அலவன்றன் பார்ப்பினோ
டீஇர் இசையுங்கொண் டீரளைப் பள்ளியுள்
தூஉம் திரையலைப்பத் துஞ்சா துறைவன்றோள்
மேஎ வலைப்பட்ட நம்போல் நறுநுதால்!
ஓஒ உழக்கும் துயர்!’
இஃது அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றிவரத் தொடுத்
தமையால், அடி அளபெடைத் தொடை.
[நேரிசை ஆசிரியப்பா]
‘தாஅட் டாஅ மரைமலர் உழக்கிப் [இணை]
பூஉக் குவளைப் போஒ தருந்திக் [பொழிப்பு]
காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் [ஒரூஉ]
மாஅத் தாஅள் மோஒட் டெருமை [கூழை]
தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல் [மேற்கதுவாய்]
மீஇன் ஆஅர்ந் துகளும் சீஇர் [கீழ்க்கதுவாய்]
ஏஎர் ஆஅர் நீஇள் நீஇர் [முற்று]
ஊரன் செய்த கேண்மை
ஆய்வளைத் தோளிக் கலரா னாதே.’
|